திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

நடிப்பை தாண்டி ஷாப்பிங் மாலில் அதிகம் முதலீடு செய்யும் விஜய்.. மூக்கு மேல விரல் வச்சு பார்க்கும் திரையுலகம்

நடிகர் விஜய் தற்போது லியோ படத்தில் நடித்து வரும் நிலையில், அவரது ஒவ்வொரு அசைவும் பலருக்கும் அண்மைக்காலமாக ஆச்சரியப்பட வைத்து வருகிறது. அவர் அடுத்து நடிக்க போகும் தளபதி 68 படத்துக்கு 200 கோடி சம்பளம், அரசியலில் களமிறங்க புதுமையான பல திட்டங்கள் என இவரது வளர்ச்சி அபரிவிதமாக உள்ளது.

மேலும் நடிகர் விஜய்க்கு ஏற்கனவே தமிழகத்தில் பல திருமண மண்டபங்கள், பல தொழில்கள், லண்டன் மற்றும் துபாய் உள்ளிட்ட நாடுகளில் சொத்துக்கள், சென்னையில் ஆடம்பர வீடு மற்றும் கார்கள் என நடிப்பதையும் தாண்டி பிஸ்னஸ் செய்து பல சொத்துக்களை சேர்த்து வைத்துள்ளார். ஆனால் இதற்கெல்லாம் ஒருபடி மேல் சென்று எந்த தமிழ் நடிகர்களும் செய்யாத ஒன்றை விஜய் செய்து வருவது தான் ஆச்சரியம்.

Also Read:  234 தொகுதி, 6000 நபர்கள்.. கலைஞர் பிறந்த நாளில் பக்கா ப்ளான் போட்டு காய் நகர்த்தும் விஜய்

பொதுவாக பிரபல நடிகர்கள் சினிமாவில் சம்பாதித்த பணத்தை வைத்து தயாரிப்பு நிறுவனம் தொடங்குவது, சிலர் திரையரங்குகளை விலைக்கு வாங்கி நடத்துவது என சினிமா சம்பந்தமான தொழிலைச் செய்து வருவார்கள். இதனிடையே நடிகர் விஜய் தற்போது ஷாப்பிங் மால், மல்டிபிளக்ஸ் உள்ளிட்டவற்றை நிறுவி தொழில் செய்ய மும்முரமாக உள்ளார்.

தற்போது நடிகர் விஜய் 200 கோடி வரை சம்பளமாக வாங்கி வரும் நிலையில், அந்த பணத்தை எப்படி அவர் செலவு செய்வார் என்பதை பார்க்கவும் பலருக்கும் ஆர்வம் எனலாம். அந்த வகையில் தமிழகம் முழுவதும் உள்ள சில மாவட்டங்களில் ஷாப்பிங் மால், திரையரங்குகள் உள்ளிட்டவை நிறுவி, தான் சம்பாதித்த பணத்தை பல மடங்கு உயர்த்த நடிகர் விஜய் பலே கில்லாடியாக திட்டம் போட்டுள்ளார்.

Also Read: விஜய்க்கு ஓகே சொன்ன கதையில ஹிட் கொடுத்த லியோ பட வில்லன்.. மொத்தத்தையும் போட்டுடைத்த இயக்குனர்

ஏற்கனவே சென்னை விருகம்பாக்கத்தில் அமைந்துள்ள பழைய நேஷனல் திரையரங்கை விலைக்கு வாங்கிய விஜய், அதை மல்டிபிளக்ஸாக உருவாக்கி தொழில் செய்து வந்தார். இந்த வருமானத்தை கருத்தில் கொண்டு நடிகர் விஜய் தற்போது பல இடங்களில் அவரது பெயரில் மல்டிபிளக்ஸ் திரையரங்குகளை உருவாக்கி கல்லா கட்ட திட்டம் தீட்டியுள்ளார்.

தற்போது நடிகர் விஜய்யின் இந்த வியாபார யுக்தியை தெரிந்துக்கொண்டு சில நடிகர்கள் அவரை பின்தொடர முன் வருகின்றனர். நடிகர் விஜய் அடுத்தப்படியாக அரசியலில் களமிறங்க தீவிரம் காட்டும் நிலையில், கூடிய விரைவில் அரசியலில் நுழைவதற்கான பண பலத்தை மேலும் அதிகரிக்க இதுபோன்ற வியாபாரத்தை செய்து வருவதாக கோலிவுட் வட்டாரத்தில் பேசும்பொருளாக உள்ளது.

Also Read:வில்லன்களே இல்லாமல் தளபதி மாஸ் காட்டிய 5 படங்கள்.. விஜய்யின் விண்டேஜ் வெற்றிகள்

Trending News