சனிக்கிழமை, டிசம்பர் 21, 2024

ஜெட் வேகத்தில் படங்களை முடிக்கும் பகத் பாசில்.. ஒரு கெட்டப்புக்காக இவ்வளவு போராட்டமா?

நம் தமிழ் சினிமாவில் விஜய் சேதுபதி எப்படியோ அப்படித்தான் மலையாள திரையுலகில் பகத் பாசில். அவர் எந்த கதாபாத்திரங்கள் என்றாலும், எந்த கெட்டப்புகள் என்றாலும் தயங்காமல் நடிக்க கூடியவர். மலையாளத்தை போல தமிழிலும் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உருவாகி வருகின்றனர்.

தற்போது பயங்கர பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் அவர் ஒரு நாளைக்கு பல மணி நேரம் படப்பிடிப்பில் தான் இருக்கிறாராம். இதனால் மனுஷன் வீட்டுக்கே போக மாட்டார் போல என்று பலரும் பேசி வருகின்றனர். இந்நிலையில் அவர் தற்போது கைவசம் பத்து படங்களை வைத்துக் கொண்டிருக்கிறாராம்.

அந்தப் படங்கள் அனைத்தையும் வேகமாக முடிக்க வேண்டும் என்பதற்காக அவர் இரவு, பகல் பாராமல் உழைத்துக் கொண்டிருக்கிறார். அந்த ஒரு படத்திற்காக தான் அவர் இவ்வளவு பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறாராம். அதாவது தற்போது புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்து வருகின்றனர்.

அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான புஷ்பா படத்தின் முதல் பாகம் மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்றது. அதைத்தொடர்ந்து அதன் இரண்டாம் பாகத்திற்கும் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் இருக்கிறது.

அதில் பகத் பாசில் முழுவதுமாக மொட்டை அடித்துக் கொண்டு வருவாராம். மேலும் அந்த படத்திற்காக அவர் கிட்டத்தட்ட 100 நாட்கள் வரை கால்சூட் கொடுத்திருக்கிறார். அதற்காகத்தான் அவர் தற்போது கைவசம் இருக்கும் அனைத்து படங்களையும் படு வேகமாக முடித்துக் கொடுப்பதில் தீவிரமாக இருக்கிறார்.

அந்தப் படங்களை எல்லாம் முடித்துவிட்டு அவர் புஷ்பா படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்க இருக்கிறார். அது மட்டுமல்லாமல் இவர் தொடர்ந்து இதனை நாட்கள் எந்த ஒரு படத்திற்கும் கால்ஷீட் கொடுத்தது கிடையாதாம். அந்த வகையில் இந்த திரைப்படம் பகத் பாசிலுக்கு ஒரு முக்கிய படமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

Trending News