கோபி போடும் டிராமாவை இனியாவிடம் போட்டு உடைத்த பாக்யா.. ஈஸ்வரி கேட்கும் சத்தியம், பீல் பண்ணும் ஆகாஷ்

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், இனியாவிற்கு நிச்சயதார்த்தம் நடக்கப் போவதை தடுக்க முடியவில்லை என்ற பாக்யா, செல்வியிடம் ஃபீல் பண்ணுகிறார். இன்னொரு பக்கம் ரெஸ்டாரண்டுக்கு புதுசாக பிரச்சினை வந்திருக்கிறது அதை எப்படி சரி செய்வது என்றும் தெரியவில்லை என்று செல்வி இடம் சொல்லிய பொழுது செல்வி வீட்டிற்கு வந்து அமைதியாக இருக்கிறார்.

செல்வியை பார்த்தது ஆகாஷ் என்ன ஆச்சு என்று கேட்ட பொழுது எல்லாத்துக்கும் அவங்க அவங்க பிரச்சினை தான் பெருசாக தெரிகிறது. பாக்கியா அக்கா மீதும் தவறு சொல்ல முடியாது. அவர்களுக்கு சுத்தி பிரச்சனை இருப்பதால் நம்மளை பெரிசாக தெரியவில்லை. எல்லோரும் மனசிலும் நாம் ஒரு எட்டாத தூரத்தில் இருக்கிறோம் என்ற நினைப்பு இருக்கிறது.

இதை மாற்ற வேண்டுமென்றால் நீ படித்து எல்லோரையும் தலை நிமிர்ந்து பார்க்க வைக்க வேண்டும். நீ படித்து கலெக்டர் ஆனதற்கு பிறகு நம்முடைய குடும்பம் தலை நிமிர்ந்து நிற்கும். அதுவரை எதைப் பற்றியும் யோசிக்காமல் நீ படிக்க வேண்டும் என்று ஆகாஷிடம் சொல்கிறார். ஆகாஷ் ஓகே என்று சொல்லிய நிலையில் என்ன பிரச்சனை என்று கேட்கிறார். உடனே செல்வி, இனிய பாப்பாவிற்கு கல்யாணம் பண்ணி வைக்கப் போகிறார்கள்.

அதனால் வருகிற ஞாயிற்றுக்கிழமை நிச்சயதார்த்தம் நடக்கப் போகிறது என்று சொல்கிறார். இதை கேட்டதும் ஆகாஷ் அழுது ரொம்பவே ஃபீல் பண்ண ஆரம்பித்து விட்டார். இன்னொரு பக்கம் இனியா, ஆகாஷை மறக்கவும் முடியாமல் கல்யாணம் பண்ணவும் முடியாமல் பாக்யாவிடம் பில் பண்ணி பேசுகிறார். அதற்கு பாக்கியா உனக்கு விருப்பமில்லாத விஷயத்தை யார் நினைத்தாலும் பண்ண முடியாது.

அதற்கு நீ உறுதியாக இருக்க வேண்டும், உங்க அப்பா போடும் டிராமாவுக்கு நீ ஏமாந்து போய் நிக்காதே. உனக்கு என்ன தோணுதோ அதை பண்ணு யார் கூட இருக்காங்களோ இல்லையோ நான் கூடவே இருப்பேன் என்று இனியாவிற்கு ஆறுதல் சொல்கிறார். அடுத்ததாக கோபிக்கு உடம்பு சரியில்லை என்று செழியனுக்கு போன் வருகிறது.

உடனே செழியன், இனியாவை கூட்டிட்டு கிளம்பும்பொழுது பாக்கியா மற்றும் எழில் சொல்லியது என்னவென்றால் கோபி போடுவது நெஞ்சுவலி டிராமா. அந்த ட்ராமாவை வைத்து உனக்கு கல்யாணத்தை பண்ணி வைக்கலாம் என்று பிளான் போடுகிறார்கள். அதனால் நீ யோசித்து முடிவெடு என்று இனியாவிற்கு சொல்கிறார்கள். அதே மாதிரி ஆஸ்பத்திரிக்கு வந்த இனியாவிடம் கோபி, கல்யாணத்திற்கு சம்மதம் சொல்லு என்று சத்தியம் வாங்குகிறார். ஆனால் கடைசியில் இனியா ஆகாசுக்கு தான் கல்யாணம் நடக்கப் போகிறது.

Leave a Comment