வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

சரண்யா பொன்வண்ணனுக்கு டஃப் கொடுக்கும் பாக்யா.. சூட்டிங் ஸ்பாட்டில் வெளிவந்த புகைப்படம்

டிஆர்பி-யில் தற்போது டாப் லிஸ்டில் இருக்கும் விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் கடந்த சில வாரங்களாகவே விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் தவிர்க்கமுடியாத சீரியலாக மாறி இருக்கிறது.

இந்த சீரியலின் கதாநாயகி பாக்கியலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் சுசித்ரா, இல்லத்தரசிகள் படும் பாடுகளை தத்ரூபமாக நடித்துக் காட்டி ஏராளமான சின்னத்திரை ரசிகர்களின் மனதை கவர்ந்திருக்கிறார். கன்னட நடிகையான இவர் தமிழில் நடிக்கும் முதல் சீரியல் பாக்கியலட்சுமி தான்.

எனவே இந்த சீரியலில் மூன்று பிள்ளைகளுக்கும் அம்மாவாக நடித்து அசத்தியதால் இவருக்கு சினிமாவில் தற்போது பட வாய்ப்பு கிடைத்திருக்கிறது. சுசித்ரா பிரபுதேவாவுடன் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். இந்த படம் தமிழ், கன்னடம் என்ற இரண்டு மொழிகளில் தயாராகி கொண்டிருக்கிறது.

இதில் பிரபுதேவாவிற்கு அம்மாவாக நடித்துக்கொண்டிருக்கிறார். படப்பிடிப்பு தளத்தில் பிரபுதேவா, சுசித்ரா மடியில் படுத்திருப்பது போன்றும் அவருடன் சேர்ந்து இருக்கும் புகைப்படங்கள் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாக பரவுகிறது.

serial-actress-suchithra-cinemapettai
serial-actress-suchithra-cinemapettai

தமிழ் சினிமாவில் நடிகை சரண்யா பொன்வண்ணன் அம்மா கதாபாத்திரத்தில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து பிரபலமானது போல் சுசித்ரா இனிவரும் நாட்களில் முன்னணி நடிகர்களுக்கு அம்மாவாக நடிக்க அதிக வாய்ப்பு இருக்கிறது.

ஏனென்றால் ஒரு சில முக அமைப்புதான் அம்மா கதாப்பாத்திரத்திற்கு சரியாக பொருந்தும். ஆகையால் சென்டிமென்ட் தாயாக கச்சிதமாக நடிக்கும் சுசித்ராவும் கோலிவுட்டில் இனிமேல் வெளியாகும் படங்களில் அடுத்தடுத்து கமிட்டாகி ஒரு ரவுண்டு கட்ட போகிறார்.

suchithra-cinemapettai
suchithra-cinemapettai

Trending News