புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

விஷத்தை கக்க ஆரம்பித்த ராட்சசன்.. ஈவு இரக்கமில்லாமல் நடந்து கொண்ட கோபியால் நடுத்தெருவிற்கு வரும் பாக்யா

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் கடந்த சில நாட்களாக எழிலின் திருமணம் யாருடன் நடக்கப்போகிறது என பரபரப்பாக காட்டப்பட்டது. கடைசியில் குடும்பத்தையே எதிர்த்து, பாக்யா தன்னுடைய மகன் எழில் காதலித்த அமிர்தா உடன் திருமணம் செய்து வைத்தார்.

திருமணம் முடிந்த கையோடு வீட்டுக்கு வந்த எழில், அமிர்தா மற்றும் பாக்யாவை கோபியின் அம்மா ஈஸ்வரி வீட்டிற்குள் வரவிடாமல் தடுக்கிறார். ஆனால் பல போராட்டத்திற்குப் பிறகு வீட்டிற்குள் வந்த அவர்களை ஈஸ்வரி, கேவலமாக பேசியது மட்டுமல்லாமல் சாபமிடுகிறார்.

Also Read: 2 முறை விவாகரத்தாச்சு.. 3-வது காதலனுடன் நெருங்கிய புகைப்படத்தை வெளியிட்ட டாப் சீரியல் நடிகை

எப்படியாவது  எழிலை வைத்து கோபி சொன்ன பணத்தை கொடுத்துவிட்டு வீட்டை மீட்டெடுக்கலாம் என நம்பி இருந்த ஈஸ்வரி தற்போது எதிர்பாராத முடிவை எடுக்கிறார். அதாவது கோபியின் வீட்டிற்கு சென்று அவரிடம் வீட்டைக் கேட்க வேண்டாம் என்று கெஞ்சுகிறார்.

அப்போது கோபியின் அப்பா ராமமூர்த்தியும் கிராமத்தில் இருக்கும் மொத்த சொத்தையும் எழுதி வைத்து விடுகிறேன் வீட்டை மட்டும் விட்டுவிடு என்று கேட்கிறார். பெத்த தாய் தகப்பன் இவ்வளவு கெஞ்சியும் கேட்காத கோபி, வேகமாக பாக்யாவிடம் சென்று ஈவு இரக்கம் இல்லாமல் வீட்டை விட்டு வெளியே போ என்று விஷத்தை மொத்தமாக கக்கும் ராட்சசனை போல் மாறிவிட்டார்.

Also Read: பீச் மணலே சூடாகும் புகைப்படத்தை வெளியிட்ட லாஸ்லியா.. ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய போட்டோஸ்

ஏனென்றால் கிராமத்தில் இருக்கும் மொத்த சொத்தை விற்றாலும் இந்த வீட்டிற்கு ஈடாகாது என்று, ராமமூர்த்தி கொடுத்த ஆஃபரை நிராகரித்து பாக்யாவை நடுத்தெருவில் நிறுத்த கோபி கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறார். இருப்பினும் பாக்யா ஏற்கனவே கேட்டரிங் தொழிலில் முன்னேறுவதற்கு உதவி புரிந்த தொழிலதிபரின் உதவியுடன் இந்த வீட்டை மீட்டெடுப்பார்.

அதன் பிறகு கோபியின் ஆட்டம் மொத்தமாக அடங்கும். இதையெல்லாம் பார்க்க சின்னத்திரை ரசிகர்களும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். மேலும் இந்த சீரியலில் வில்லனாக நடிக்கும் கோபிக்கு எக்கச்சக்கமான ஃபேன்ஸ் இருப்பதால், இவ்வளவு நாள் கோபியின் ஆட்டம் வெளிப்படாமல் இருந்த நிலையில், இந்த வாரம் அதை பார்க்க காத்திருக்கின்றனர்.

Also Read: அஜித்தின் இடம் அடுத்தது கவினுக்கு தான்.. 3 படத்துக்குகே இவ்வளவு பெரிய பில்டப்பா!

Trending News