புதன்கிழமை, ஜனவரி 22, 2025

கோபி மூஞ்சில் கரியை பூசி மாமி-க்கு சவுக்கடி கொடுக்கப்போகும் பாக்யா.. எவ்வளவு பட்டாலும் புத்திகெட்டு திரியும் ஈஸ்வரி

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், இதுவரை நாடகம் ஆரம்பித்ததில் இருந்து இப்பொழுது தான் பாக்யா முதல் முறையாக ஒரு உருப்படியான விஷயத்தை செய்திருக்கிறார். அதாவது இனிமேலும் கோபி மற்றும் மாமியார் பேச்சை கேட்டுக் கொண்டிருந்தால் செழியனின் வாழ்க்கை கேள்விக்குறியாகி விடும் என்று தன்னிச்சையாக ஒரு முடிவு எடுத்து விட்டார்.

அதாவது சம்பந்தப்பட்ட ஜெனியையும் செழியனையும் தனியாக பேச வைத்தால் எல்லா பிரச்சினையும் சரியாகிவிடும் என்று நினைத்தார். அதனால் ஜெனி அம்மாவின் உதவியுடன் ஏற்பாடு நடைபெற்றது. இந்த விஷயம் வீட்டிற்கு தெரியாமல் எப்படியாவது செழியனை கூட்டிட்டுப் போக வேண்டும் என்று பாக்கியா எழிலிடம் கூறிவிட்டார்.

அதன்படி வீட்டில் உள்ளவர்களிடம் பாக்யா பொய் சொல்லிக்கொண்டு செழியனை கூட்டிட்டு கிளம்பி விடுகிறார். அடுத்து ஜோசப்பிடம் பொய் சொல்லி ஜெனியையும் அவருடைய அம்மா வெளியே கூட்டி வந்து விடுகிறார். பிறகு இருவரையும் ஒரு வீட்டில் சந்திப்பதற்கு ஏற்பாடு பண்ணி இருக்கிறார்.

அதற்காக பாக்யா, செழியன் இடம் எந்த உண்மையையும் சொல்லாமல் அந்த வீட்டிற்கு கூட்டிட்டு வருகிறார். அதே மாதிரி ஜெனி அந்த வீட்டில் இருக்கும் ஒரு அறையில் இருக்கிறார். இது தெரியாத செழியன் எங்கே போகிறோம் என்று பாக்கியவிடம் கேட்கிறார்.

கோபி மூஞ்சில் கரியை பூச போகும் பாக்கியா

ஆனால் பாக்கியா, எதுவும் கேட்காமல் வாயை மூடிட்டு வா என்று சொல்லி அந்த அறைக்குள் செழியனை தள்ளி விட்டு கதவை லாக் போட்டு விடுகிறார். உள்ளே போய் செழியன் பார்த்ததும் அங்கே ஜெனி இருக்கிறார். அப்பொழுது இரண்டு பேருமே பார்த்துக் கொண்டு சந்தோசப்பட்டு போகிறார்கள்.

இதனைத் தொடர்ந்து ஒருவரை ஒருவர் பேசிக் கொண்டு சுமூகமாக ஒரு முடிவை எடுப்பதற்கு வாய்ப்பாக அமையப்போகிறது. இது தெரியாமல் செழியனுக்கு வேற கல்யாணம் பண்ணனும் என்று ஆசைப்பட்டு வரும் கோபிக்கும் மாமியாருக்கும் இது மிகப்பெரிய சவுக்கடியாக இருக்கப் போகிறது.

இந்த கல்யாணத்தை எப்படியாவது நடத்தி வீட்டில் இருப்பவர்களை தன் பக்கம் இழுக்க வேண்டும் என்று நினைத்த கோபி முகத்தில் பாக்யா கரியை பூசி விட்டார். இதற்கு இடையில் மகன் தன்னை விட்டுட்டு போன பிறகும் மருமகள் பாக்யா தான் கூடவே இருந்து பார்த்துக் கொண்டார் என்ற நன்றி கொஞ்சம் கூட இல்லாமல் மீண்டும் புத்தி கெட்டு கோபி சொல்வதையே வேதவாக்காக எடுத்துக்கொண்டு ஈஸ்வரி திரிகிறார்.

Trending News