ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

ஈஸ்வரியை வைத்து காய் நகர்த்திய பாக்யா.. ஊஞ்சலாடும் கோபி நிலைமை, பரிதவிப்பில் தவிக்கும் எழில்

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், எழில் எடுத்து வைக்கும் முதல் படிக்கட்டை கண்குளிர பார்க்க வேண்டும் என்று ஆசை ஆசையாக ஓடி வந்த பாக்யாவிற்கு பெரிய ஏமாற்றம் நடந்து விட்டது. கோபி செய்த சூழ்ச்சியில் எழில் மாட்டிக் கொண்டதால் பாக்யாவால் பட பூஜையில் கலந்துக்க முடியாமல் கண்ணீருடன் வெளியேறி விட்டார்.

என்னதான் எழில், பாக்கியலட்சுமி என்ற பெயரில் படத்தை இயக்கப் போனாலும் அம்மாவை தடுத்து விட் டோமேஎன்ற குற்ற உணர்ச்சியில் தவிக்கிறார். அப்பொழுது கோபி பார்த்து பேசும் பொழுது எழில், கோபியிடம் நான் இந்த ஒரு சூழ்நிலையை கொஞ்சம் கூட நினைச்சு பார்க்கவே இல்லை. அம்மாவா என்னுடைய கேரியரா என்ற நிர்பந்தத்திற்கு என்னை ஆளாக்கி விட்டீர்கள்.

அக்ரிமெண்டில் கையெழுத்து போடுவதற்கு முன் வரை உங்கள் சூழ்ச்சி தெரிந்திருந்தால் நிச்சயம் இந்த வாய்ப்பே வேண்டாம் என்று உதறித் தள்ளி இருப்பேன். ஆனாலும் என்னுடைய அம்மா என்னை புரிந்து கொள்வார் என்று பரிதவித்து கோபியிடம் பேசுகிறார். ஆனால் கோபி, உங்க அம்மாவால யாருக்கும் எந்த நன்மையும் கிடைக்காது. வீட்டுக்குள் இருந்து சமைச்சு போட மட்டும் தான் தெரியும் என்று வழக்கம்போல் பாக்கியவை மட்டம் தட்டி பேசுகிறார்.

ஆனால் எழில், நீங்கள் இவ்வளவு தூரம் பேசியதற்கு இன்னும் அனுபவிப்பீங்க எங்க அம்மாவை பற்றி புரிந்து கொள்வீர்கள் என்று சொல்லி கிளம்பி விடுகிறார். அடுத்ததாக பாக்யா வீட்டிற்கு சோகத்துடன் வருகிறார். பாக்கியாவை பார்த்து ஈஸ்வரி, பட பூஜைக்கு போகலையா என்று கேட்கிறார். பாக்கியா எனக்கு ரெஸ்டாரண்டில் வேலை இருப்பதால் போக முடியவில்லை என்று சொல்லி ஈஸ்வரியை ஹோட்ட லுக்குவற்புறுத்தி கூட்டிட்டு போகிறார்.

ஈஸ்வரி வரமாட்டேன் என்று சொல்லிய நிலையில் நீங்கள் நிச்சயம் வர வேண்டும் என்று மாமனார் மீது சத்தியம் பண்ணி ஈஸ்வரியை கூட்டிட்டு போகிறார். அங்கே போனாலும் ஈஸ்வரி எதிலும் கலந்து கொள்ளாமல் பிடிவாதமாக ஒரு ஓரமாக இருக்கிறார். அப்பொழுது பாக்யா, ஈஸ்வரி மற்றும் ஆனந்தை தனியாக கூட்டிட்டு போகிறார். இதை வைத்து பார்க்கும் பொழுது ஹோட்டலில் இருக்கும் கருப்பு ஆடு யாரு என்பதை கண்டுபிடிக்கும் விதமாக பாக்கியா, ஈஸ்வரி வைத்து காய் நகர்த்துகிறார் என்பது போல் தெரிகிறது.

அந்த வகையில் ஆனந்த் வசமாக சிக்க போகிறார். கோபி தான் காரணம் என்று பாக்கியா மற்றும் ஈஸ்வரிக்கு தெரிந்து விட்டது. உடனே பாக்யா, கோபியிடம் நேரடியாக சண்டை போட்டு சவால் விடப் போகிறார். அதனால் இனி கோபியின் நிலமை அந்தரத்தில் தான் தொங்கப் போகிறது என்பதற்கு ஏற்ப சரியான பதிலடி கொடுக்கப் போகிறார்.

Trending News