செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

பழிக்கு பழி தீர்க்கும் பாக்யா.. ஒரே செக்கில் கோபி ஆட்டம் கிளோஸ்

விஜய் டிவியில் பாக்கியலட்சுமி சீரியலில் பாக்யாவிற்கு கோபியின் தகாத உறவு தெரிந்ததும் நிலைகுலைந்து போயிருக்கிறார். 25 வருடமாக பிடிக்காத வாழ்க்கையைதான் கோபி தன்னுடன் வாழ்ந்திருக்கிறார் என்பதை நினைத்து பாக்யா கலங்குகிறார்.

தனக்கே தெரியாமல் விவாகரத்துப் பெறுவதற்காக நீதிமன்றம் வரை அழைத்துச் சென்ற கோபிக்கு இப்பொழுது தெரிந்தே விவாகரத்து கொடுத்துவிட பாக்யா முடிவெடுத்திருக்கிறார். இந்த முடிவை குடும்பத்தினர் அனைவரும் ஏற்றுக் கொள்ள மறுத்தாலும் கோபியிடம் இருந்து விலகி செல்ல வேண்டும் என பாக்யா தெளிவாக இருக்கிறார்.

ஒருவேளை வீட்டை விட்டு வெளியேறிய பாக்யாவை சந்தித்து சமாதானப்படுத்த வேண்டும் என நினைத்தபோது அவரிடம் கோபி வெளிப்படையாக மன்னிப்பு கேட்டு இருந்தால் இவ்வளவு தூரம் வந்திருக்காது. ஆனால் அந்த சமயம் ராதிகா தான் தனது மனம் முழுவதும் இருக்கிறார் என்பதை வெளிப்படுத்தி பாக்யாவின் கோபத்தை கோபி மேலும் சீண்டி விட்டார்.

இதனால் கோபி கேட்ட விவாகரத்தை கொடுத்துவிட வேண்டும் என்பதில் பாக்யா உறுதியாக இருக்கிறார். ஆனால் கோபி-பாக்யா இருவரின் போட்டிக்கும் வீம்பிற்கும் குடும்பம்தான் பலிகெடாய் ஆகப்போகிறது. இருப்பினும் பாக்யா தற்போது நடந்து கொள்வதுதான் சரியான அணுகுமுறை என ரசிகர்கள் பலரும் பாராட்டுகின்றனர்.

இவ்வளவு நாள் தன்னை முட்டாளாக்கிய கணவரை பழிக்குப்பழி வாங்குவதற்காக பாக்யா தெரிந்தே கோபிக்கு விவாகரத்து கொடுத்து வீட்டார் அனைவரின் முன்பும் அவருடைய கேவலமான செயல்களை அம்பலப்படுத்தி அவரின் ஆட்டத்தை அடக்கியுள்ளார்.

தவறு செய்ததை ஒத்துக் கொண்டாலும் பாக்யாவிடம் இறங்கி போக கூடாது என்பதில் மட்டும் தெளிவாக இருக்கும் கோபி அவரிடம் இருந்து விவாகரத்து வாங்குவதற்காக கவலைப்படாமல் அதை சந்தோஷமாக பெற்றுக்கொண்டு, ராதிகாவை இரண்டாவது திருமணம் செய்து கொள்ள புது மாப்பிள்ளை ஆகப்போகிறார்.

Trending News