விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் கணவரின் தவறான நடவடிக்கை தெரிந்ததும் மனைவியான பாக்யா தாங்கிக் கொள்ள முடியாமல் வீட்டை விட்டு வெளியேறினார். இதனால் குடும்பமே நிலைகுலைந்து இருப்பதால் பாக்யாவை எப்படியாவது சமாதானப்படுத்தி வீட்டிற்கு அழைத்து வர வேண்டும் என கோபி அவரை சந்தித்து பேசுகிறார்.
செய்தது தவறு என்று கோபி ஒத்துக்கொண்டாலும் அதற்காக பாக்யாவிடம் மன்னிப்பு கேட்க கூடாது என்ற மொட்ட கவுரவம் பிடித்தவராக இருக்கிறார். ஏனென்றால் 25 வருடங்களாக இந்த குடும்பத்திற்காக மிஷின் மாதிரி உழைத்திருக்கிறேன் என தன்னையே நியாயப்படுத்துகிறார்.
இப்படி பக்கம் பக்கமாக வீர வசனம் பேசிய கோபியிடம் பதில் பேசாமல் நின்றிருந்த பாக்யா, அவரிடம் ஒரு உத்தரவாதத்தை மட்டும் கேட்கிறார். அந்த சமயம் கோபி பாக்யாவை எப்படியாவது வீட்டிற்கு அழைத்து செல்ல வேண்டும் என்பதனால் அவர் கேட்கும் சத்தியத்தை செய்து கொடுக்கிறார்.
ஆனால் வாய்தவறி, ‘நீ தான் என்னுடைய வாழ்க்கை ராதிகா’ என ராதிகாவின் பெயரை சொல்லி விட கோபத்தின் உச்சத்திற்கே சென்ற பாக்யா, பிறகு கோபியிடம் வாயை திறந்து பேசாமல் கையால் ‘வீட்டை விட்டு வெளியே போ’ என சைகை காட்டி முறைக்கிறார்.
மனைவியிடம் படு கேவலப்பட்ட கோபி, வீட்டில் இருப்பவர்களை எப்படி சமாளிப்பது என புலம்புகிறார். இதையெல்லாம் பார்த்த மகன் எழில் கொலைவெறியில் கொந்தளிக்கிறார். இருப்பினும் அவரால் அப்பாவை எதுவும் செய்ய முடியாமல் பாக்யா எடுக்கும் முடிவிற்கு துணை நிற்க தான் முடிகிறது .
மறுபுறம் ராதிகா மும்பைக்கு கிளம்ப இருந்த நிலையில் அவருடைய மகளுக்கு திடீரென உடல்நிலை குறைவு ஏற்பட்டதால் அவர் மும்பைக்கு செல்லாமல் சென்னையிலேயே தங்குகிறார். இதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கோபி எப்படியாவது ராதிகாவை சந்தித்து சமாதானப்படுத்தி அவருடைய மனதை மாற்றிவிடுவார்.
ஆனால் பாக்யாவின் நிலை தான் பரிதாபமாக இருக்கிறது. திருமண வயதில் பிள்ளைகள் இருக்கும்போது கணவரை விவாகரத்து செய்தால் அதுவே அவர்களது வாழ்க்கையை பாதித்து விடுமோ என்றும் பாக்யா கலங்குகிறார். 24 நான்கு மணி நேரமும் ராதிகாவின் நினைப்பிலேயே இருக்கிற கோபியுடன் இனி ஒரு காலமும் பாக்யா வாழமுடியாது. ஆகையால் இனி வரும் நாட்களில் பாக்யா தனித்து வாழவே விரும்புவார்.