திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

ஒருத்திக்கு ரெண்டு பேரு அடிச்சுக்கிறாங்க.. விஷயம் தெரிந்ததும் ஆடிப்போன பாக்யா

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் 25 வருடங்களாக சேர்ந்து வாழ்ந்த மனைவியை விவாகரத்து செய்துவிட்டு, இரண்டாவது திருமணம் ஆக கல்லூரிக்கு தனி ராதிகாவை திருமணம் செய்து கொள்வதற்காக பொய் பித்தலாட்டத்தை நடத்திய கோபியின் சுயரூபம் ராதிகாவிற்கு தெரியவர அதன் பிறகு கோபியை அடியோடு ராதிகா வெறுகிறாள்.

இருப்பினும் ராதிகா மற்றும் மயூ இருவரையும் பார்க்காமல் கோபியால் இருக்க முடியவில்லை. இதனால் ராதிகா வீட்டிற்கு வரும் கோபியை பலமுறை நாயை போல் அடித்து வெளியே விரட்டினாலும், மீண்டும் மீண்டும் ராதிகாவை தேடி கோபி வருகிறான். இதனால் ராதிகா மற்றும் கோபி இருவருக்கும் வாக்குவாதம் ஏற்படுவதை ராதிகாவின் முதல் கணவர் ராஜேஷ் நோட்டம் மிடுகிறார்.

அதன் பிறகு கோபியிடம், ‘உன்னையும் கழட்டி விட்டாளா!’ என ராஜேஷ் ராதிகாவை தரக் குறைவாகப் பேசுவதை தாங்க முடியாமல், ராஜேஷ்-ஐ கோபி அடித்து விடுகிறான், இருவரும் ராதிகா வீட்டிற்கு முன்பு சண்டை போட்டுக்கொண்டு கட்டி உருள்வதை ஊரே வேடிக்கை பார்க்கிறது.

சிலர், ‘ஒருத்திக்கு ரெண்டு பேரு அடிச்சுக்கிறாங்க’ ராதிகா முன்பே தூற்றுகின்றனர். அத்துடன் பாக்யா வீட்டில் வேலை செய்யும் செல்வியும் இதைப் பார்த்துவிட்டு பாக்யாவிடம் போய் தெரிவிக்கிறார். ஆனால் செல்வி கோபி மற்றும் ராஜேஷ் இருவரும் அடித்துக் கொள்வதை பார்க்காமல் சண்டை முடிந்தபின் கோபி அலுவலகத்திற்கு சென்று விட, ராஜேஷ் ராதிகாவை கண்டபடி திட்டி கொண்டிருப்பதை மட்டும் பார்த்து அதை மட்டும் பாக்யாவிடம் செல்வி சொல்கிறாள்.

இதன்பிறகு பாக்யா, ராதிகா வீட்டில் ஏதோ பெரிய பிரச்சனை ஏற்படுகிறது என அவளை நேரில் சந்தித்து பார்க்க கிளம்புகிறாள். அங்கு ராதிகாவின் அம்மா இருக்க, பாக்யா தான் கோபியின் மனைவி என்பதை தெரிந்து கொண்டபின், பாக்கியாவை பற்றி இல்லாதது பொல்லாதது எல்லாம் சொல்லி ராதிகாவிடம் ஏற்றி விடுகிறார்.

இதன்பிறகு, பாக்யா எதற்காக கோபிக்கு விவாகரத்து கொடுத்தார் என்பது தெரியாமல் ராதிகா குழம்புகிறாள். இதை சாதகமாக பயன்படுத்தி கோபி ராதிகாவிடம் பாக்யாவை பற்றி தவறாக பேசி அவர்கள் இருவருக்கும் இடையே இருக்கும் நட்பை பிரித்து மீண்டும் ராதிகாவின் தன் வலையில் விழ வைக்க பார்ப்பான்.

Trending News