செவ்வாய்க்கிழமை, ஜனவரி 21, 2025

Bhakkiyalakshmi: ராதிகாவிற்கு போட்டியாக வரும் பாக்யா.. பழனிச்சாமி போற ஸ்பீடுக்கு கோபிக்கு டஃப் கொடுப்பார் போல

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், ஜெனியின் குழந்தைக்கு பெயர் வைக்கிற ஃபங்ஷன் விழாவை மிகச் சிறப்பாக நடத்த வேண்டும் என்று ஒட்டுமொத்த குடும்பமும் குதுகலமாக ஆகிவிட்டார்கள். இந்த நிலையில் பெயரை தேர்வு செய்யும் பொறுப்பை ஜெனி, பாட்டியிடம் ஒப்படைத்து விட்டார்.

ஆனால் இதற்கு இடையில் செழியனை சீண்டி பார்க்கும் வகையில் நீ ஏதாவது பெயர் மனசில் வச்சிருக்கியா என்று கேட்கிறார். அதற்கு ராகினி என்ற பெயர் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன் என்று செழியன் சொல்கிறார். அதாவது என்ன காரணம் என்றால் ரா என்பது தாத்தா பெயரான ராமசாமி. அதனால் அவர் பெயர் வைத்த மாதிரி இருக்கும் என்று ராகினியை தேர்வு செய்தேன் என்று கூறுகிறார்.

இதை கேட்டதும் ஜெனி அதெல்லாம் ஓகே தான் அந்த “னி” என்பது வேறு எதையோ சொல்வது போல் தெரிகிறது. அப்படி என்றால் நீ, மாலினி பெயர் தான் மனசுல வச்சு சொல்றியா என்று கேட்கிறார். உடனே செழியன் இது என்னடா வம்பாபோச்சு இந்த ஆட்டத்துக்கு நான் வரவே இல்லை என்று போய்விடுகிறார்.

கோபி குடும்பத்துக்கு தெரியவரும் உண்மை

இதனைத் தொடர்ந்து ராதிகா கர்ப்பமாக இருக்கிறார் என்ற விஷயம் தற்போது பாக்யாவிற்கு மட்டும் தெரிந்திருக்கிறது. இதனால் அவ்வப்போது ராதிகாவுக்கு கமுக்கமாக பாக்யா பணிவிடை செய்து வருகிறார். தற்போது இந்த ஒரு விஷயம் ஜெனி குழந்தைக்கு பெயர் வைக்கும் பொழுது அனைவருக்கும் தெரிய வாய்ப்பு இருக்கிறது.

ஆனால் தெரிந்தாலும் யாரும் ஒன்னும் பண்ண முடியாது என்று சொல்வதற்கு ஏற்ப கோபியும் ராதிகாவும் எந்த ஒரு விஷயத்தில் ரொம்பவே உறுதியாக இருப்பதால் யாரும் இதில் தலையிட முடியாது. மேலும் இந்த ஒரு விஷயத்தை அடுத்து அனைவரது கவனமும் பாக்யா மீது திரும்பும்.

அதாவது குடும்ப பாரங்களை பாக்யா சுமந்தது போதும். இனி அவருக்கென்று ஒரு வாழ்க்கை வேணும். அதனால் பழனிச்சாமியை கல்யாணம் பண்ணி வைக்கலாம் என்ற பேச்சுவார்த்தை ஆரம்பமாகப் போகிறது. ஏற்கனவே பழனிச்சாமிக்கும் இந்த நினைப்பு வந்ததால் இதற்கு அடுத்த அனைத்து வேலைகளும் இதை நோக்கி போகப்போகிறது.

சும்மாவே பழனிச்சாமி போற ஸ்பீடு கோபியை விட டபுள் மடங்காக தெரிகிறது. இப்படியே போனால் ராதிகா கர்ப்பத்திற்கு போட்டியாக பாக்யாவும் வந்து விடுவார் போல. இப்படியெல்லாம் வரக்கூடாது என்று கமெண்ட்ஸ் மூலம் சொல்வதற்கு ஏற்ப அதன்படியே கதை கொஞ்சம் கொஞ்சமாக கதை நகர்ந்து வருகிறது. அந்த வகையில் பாக்கியா கர்ப்பம் ஆனாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.

Trending News