செவ்வாய்க்கிழமை, ஜனவரி 7, 2025

18 வயதில் எம்எஸ்வியின் மருமகளான பாக்யராஜ் பட நடிகை.. சில வருடங்களில் விவாகரத்து, திசை மாறிய வாழ்க்கை

MS Viswanathan : பொதுவாக பல சினிமா நடிகைகளின் சொந்த வாழ்க்கை அந்தரத்தில் தான் தொங்குகிறது. ஏனென்றால் மற்ற வேலைகளை போல சினிமா துறை இல்லை. இரவு நேரங்களிலும் சில சமயம் சூட்டிங் நடக்கும். இவ்வாறு குறித்த நேரம் என்று சொல்ல முடியாமல் வேலை பார்க்க நேரிடும். இதனால் அவர்கள் குடும்பத்திலும் நிறைய பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

இந்நிலையில் பிரபல இசையமைப்பாளர் எம் எஸ் விஸ்வநாதனின் மருமகளும் இதே பிரச்சனையை சந்தித்துள்ளார். அதாவது இசையமைப்பாளர், பாடகர், நடிகர் என பன்முகத்தன்மை கொண்டவர் எம் எஸ் வி. இவருக்கு கிட்டத்தட்ட ஏழு குழந்தைகள் இருந்துள்ளனர். அதில் ஒரு மகனான இயக்குனர் கோபாலகிருஷ்ணன் என்பவரை நடிகை சுலோச்சனா காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

Also Read : 20 ஆயிரம் கடன் கொடுக்க முடியல இப்ப 100 கோடி வருமானம்.. வியக்க வைத்த எம்.எஸ்.வி மகளின் பிசினஸ்

தன்னுடைய இரண்டரை வயதிலிருந்தே சினிமாவில் நடிக்க தொடங்கியவர் சுலோச்சனா. பலமொழி படங்களில் கிட்டத்தட்ட 450 படங்களுக்கு மேல் இவர் நடித்துள்ளார். அதுவும் பாக்யராஜுடன் இவர் இணைந்து நடித்த தூறல் நின்னு போச்சு படம் மிகப்பெரிய பெயரை வாங்கிக் கொடுத்தது.

இந்நிலையில் சுலோச்சனாவின் அம்மா மிகவும் கண்டிப்பானவராம். படப்பிடிப்பு தளத்தில் கதாநாயகர்களுடன் எல்லாம் பேசக்கூடாது என கண்டிஷன் போடுவாராம். அதையும் மீறி எம்எஸ்வியின் மகனை 18 வயதில் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர்.

Also Read : பாக்யராஜின் படங்களை தாங்கி பிடித்த 4 நடிகர்கள்.. ராசுக்குட்டி வெற்றிக்கு காரணம் இவரே

ஆனால் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். எம்எஸ்வியின் மகன் கோபிகிருஷ்ணன் வேறு ஒரு பெண்ணை மறுமணம் செய்து கொண்டார். ஆனால் சுலோச்சனா தனது குழந்தைகளை வளர்க்க வேண்டும் என்பதற்காக திருமணம் செய்து கொள்ளாமல் தனியாக போராடினார்.

அதுமட்டுமின்றி மூன்று மகன்களையுமே நன்கு படிக்க வைத்து நல்ல வேளையில் உள்ளார்கள். மேலும் சுலோச்சனா இப்போதும் தனது முன்னாள் கணவருடன் தொலைபேசி வாயிலாக பேசி வருவாராம். இப்போது இருவரும் நல்ல நண்பர்களாக இருக்கிறோம் என்றும் எனது மகன்களின் திருமணத்தில் அவர் மற்றும் அவருடைய மனைவியும் கலந்து கொண்டார்கள் என பேட்டி ஒன்றில் சுலோச்சனா கூறியிருந்தார்.

Also Read : பாக்யராஜ் சினிமா கேரியரில் சொதப்பிய 5 படங்கள்.. வாரிசுகளால் மண்ணை கவ்விய திரைக்கதை மன்னன்

Trending News