திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

இப்பவும் டிவி முன் அமர வைக்கும் பாக்கியராஜின் 5 படங்கள்.. துணிவை மிஞ்சிய பேங்க் ராபரி

தற்போது உள்ள காலங்களுக்கு ஏற்றபடி எத்தனை படங்கள் வந்தாலும் 80,90களில் வந்த படங்களுக்கு எப்போதுமே ஒரு தனி மவுஸ் உண்டு. அதிலும் முக்கியமாக பாக்யராஜ் படங்கள் எப்படி இருக்கும் என்று நம் சொல்லவே தேவையில்லை. இவரது படங்கள் அப்பொழுது மட்டும் அல்ல இப்பவும் டிவியில் போட்டால் இருக்கும் இடத்தை விட்டு நகராமல் நம்மளை பார்க்க வைக்கும். அந்த அளவுக்கு அவரின் படங்களில் ஒரு காந்த ஈர்ப்பு சக்தி இருக்கிறது. அப்படிப்பட்ட இவரின் சில படங்களை பற்றி பார்க்கலாம்.

இது நம்ம ஆளு: பாலகுமாரன் இயக்கத்தில் 1988 ஆம் ஆண்டு இது நம்ம ஆளு திரைப்படம் வெளிவந்தது. இப்படத்தில் பாக்கியராஜ், ஷோபனா, மனோரமா, குமரிமுத்து ஆகியோர் நடித்தார்கள். இதில் பாக்கியராஜ், பூசாரி பிராமணனாக வேஷம் போட்டு ஷோபனா வீட்டுக்கு வருவார். பின்பு இவருடன் காதல் ஏற்பட்டு ஷோபனா இவரை திருமணம் செய்து கொள்வார். இந்தப் படத்தில் வரும் ஒவ்வொரு காட்சியும் ஸ்கிப் பண்ண முடியாத அளவிற்கு ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செதுக்கி இருப்பார்கள். முக்கியமாக இதில் வரும் “நான் ஆளான தாமரை” இந்த பாடலுக்கு அடிமை ஆகாதவர்கள் யாரும் கிடையாது.

Also read: ரீமேக் ஆகும் முந்தானை முடிச்சு.. பாக்கியராஜ்க்கு பதிலா யார் நடிக்க போறாங்க.?

முந்தானை முடிச்சு: கே.பாக்யராஜ் இயக்கத்தில் 1983 ஆம் ஆண்டு முந்தானை முடிச்சு திரைப்படம் வெளிவந்தது. இதில் பாக்கியராஜ், ஊர்வசி, பூர்ணிமா ஆகியோர் நடித்தார்கள். இப்படத்தில் பாக்கியராஜ் வாத்தியாராக பணிபுரிவார். இவரை காதலிக்கும் பரிமளா என்ற கதாபாத்திரத்தில் குறும்புக்கார பெண்ணாக ஊர்வசி நடித்திருப்பார். இப்படம் விமர்சன ரீதியாகவும் மற்றும் பாக்ஸ் ஆபிஸில் பெரிய வெற்றி படமாகவும் மாறியது. இதனால் இப்படம் வெள்ளி விழா படமாக ஆனது.

அந்த ஏழு நாட்கள் : 1981 ஆம் ஆண்டு அந்த ஏழு நாட்கள் திரைப்படம் வெளிவந்தது. இப்படத்தை பாக்கியராஜ் அவர்களே எழுதி, இயக்கி மற்றும் ஹீரோவாகவும் நடித்திருப்பார். இவருடன் ராஜேஷ், அம்பிகா ஆகியோர் நடித்திருப்பார்கள். இதில் பாக்கியராஜ், மாதவன் ஆகவும் மற்றும் அம்பிகா வசந்தி என்ற கதாபாத்திரத்திலும் நடித்திருப்பார்கள்.  இவர்கள் காதல் தோல்வி அடைந்த பிறகு கிளைமாக்ஸில் பாக்யராஜ் சொல்லும் வசனம் நமது பாரம்பரியத்தை கடைப்பிடிப்பதாகும். அதாவது மாதவனின் காதலி ஆனந்தின் மனைவியாக இருக்கலாம், ஆனால் ஆனந்தின் மனைவி இனி மாதவனின் காதலியாக முடியாது என்று கூறும் காட்சி பெரிய அளவில் பாராட்டப்பட்டது.

Also read: நாங்களும் நடிப்போம் என களமிறங்கிய 5 இயக்குனர்கள்.. முருங்கைக்காயை வைத்தே ஃபேமஸான பாக்கியராஜ்

ருத்ரா: சசி மோகன் இயக்கத்தில் 1991 ஆம் ஆண்டு நகைச்சுவை திரில்லர் திரைப்படமாக ருத்ரா வெளிவந்தது. இதில் பாக்கியராஜ், கௌதமி, லட்சுமி ஆகியோர் நடித்தார்கள். இப்படம் வங்கியில் இருக்கும் பணத்தை கொள்ளையடிப்பதற்காக கச்சிதமாக பிளான் போட்டு இருப்பார்.  இதில் பாக்யராஜ் வரும் காட்சிகள் பார்ப்பதற்கு சுவாரஸ்யமாக இருக்கும். அத்துடன் இப்படம் ஹாலிவுட் அளவிற்கு எடுக்கப்பட்டிருக்கும். இப்படம் அப்பொழுது வெளிவந்த தளபதி மற்றும் குணா படங்களுக்கு கடும் போட்டியாக வெளிவந்தது. இப்பவும் இந்த படம் டிவியில் வந்தால் இருக்கும் இடத்தை விட்டு நகராமல் பார்க்கக்கூடிய படமாக இருக்கிறது.

சின்ன வீடு : கே பாக்யராஜ் இயக்கத்தில் 1985 ஆம் ஆண்டு சின்ன வீடு திரைப்படம் வெளிவந்தது. இப்படத்தில் பாக்யராஜ், கல்பனா, ஜெய்கணேஷ் மற்றும் கோவை சரளா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இதில் பாக்கியராஜ் தனக்கு வரப்போகிற மனைவி எப்படி இருக்க வேண்டும் என்று மனதில் கனவு கோட்டையாக கட்டி வைத்திருப்பார். ஆனால் அதற்கு சம்பந்தமே இல்லாமல் குண்டாக ஒரு பெண்ணை விருப்பமில்லாமல் திருமணம் செய்து கொள்வார். இவர்களுக்கிடையே ஏற்படும் பிரச்சனைகளை மையமாக வைத்து இக்கதை அமைந்திருக்கும். இப்படம் திரையரங்குகளில் 100 நாட்களுக்கு மேல் ஓடியது.

Also read: தமிழிலும், தெலுங்கிலும் வெள்ளிவிழா கண்ட ஒரே படம்.. 80 களில் இயக்குனர்களை அலற விட்ட பாக்கியராஜ்

Trending News