வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

வாலியை கோவம் வர காக்க வைத்த பாக்கியராஜ்.. பொறுமையை சோதிப்பதில் காரணம் இருக்கு

வாலி எழுதாத பாடல்கள் இல்லை என்றுதான் கூற வேண்டும் அந்த அளவிற்கு தனது பாடல்களில் ஏகப்பட்ட கருத்துக்களை உள்ளடக்கி பாடல் வரிகளை இயற்றுவதில் வல்லவர். எம்எஸ் விஸ்வநாதனின் படத்திற்கு பாடல் எழுதிய வாலி நான்கு தலைமுறைகளாக அதாவது அனிருத் வரை அனைத்து விஷயங்களுக்கும் பாடல் எழுதியுள்ளார்.

முன்னணி இயக்குனர்கள் வாலியை வைத்து பாடல் எழுத வைக்காமல் இருந்ததே இல்லை அந்த அளவிற்கு வாலியை மட்டுமே நம்பி பல இயக்குனர்கள் இருந்துள்ளனர். மேலும் அவர்களது பாடலில் வரும் வரிகளும் ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பு பெறும் என்பதால் பல இயக்குனர்களும் வாலியை தேடித்தான் பாடல் எழுதச் செல்வார்கள்.

Also read: மதிக்காத இளையராஜாவிடம் பாக்யராஜ் பண்ணிய தாஜா.. உச்சகட்ட பொறாமையில் இசை ஞானி

வாலி பொருத்தவரை ஒரு குசும்புக்கார மனிதர் என பல பிரபலங்கள் வெளிப்படையாக பல்வேறு பேட்டிகளில் கூறியுள்ளனர். இதனையே ஒருமுறை வெளிப்படையாக தெரிவித்திருந்தார். அந்த அளவிற்கு வாலி பாடல்களிலும் சரி பேச்சுகளிலும் சரி ஒரு குசும்புத்தனம் தெரியும்.

பாக்யராஜ் படங்களுக்கு பாடல் எழுத வேண்டுமென்றால் வெறுப்பாகி விடுவேன் என வாலி தெரிவித்துள்ளார். அதாவது பாக்யராஜ் பாடல் எழுதும் போது எப்போதும் சிகரெட் புகைத்தபடி அமர்ந்திருப்பார். ஒரு பல்லவி எழுதி முடிப்பதற்குள் 50 சிகரெட்டுகளை புகைத்து தள்ளி விடுவாராம்.

Also read: பாக்யராஜ் ஸ்டைலில் அமையாத ஒரே படம்.. சில்வர் ஜூப்ளியை மிஸ் செய்த திரைக் காவியம்

அதேபோல பாக்யராஜ் படங்களுக்கு பல்லவி எழுதிக் கொடுத்தாள் பாக்யராஜ் அந்த பல்லவியை வாங்கி பல மணி நேரம் பார்த்து கொண்டே இருப்பாராம் வாலி பாக்யராஜ் வீட்டில் சாப்பிட்டு சிறிது நேரம் அமர்ந்தபடியே உறங்கிவிட்டேன் சிறிது நேரம் கழித்து கண் விழித்து பார்த்தால் அப்போது கூட பாக்யராஜ் அந்த பல்லவியை தான் பார்த்துக் கொண்டே இருப்பாராம். அந்த அளவிற்கு தனது பொறுமையை சோதித்து உள்ளார் என வாலி தெரிவித்துள்ளார்.

ஆனால் பாடல் எழுதி கொடுத்துவிட்டால் வாலி எதிர்பார்த்ததைவிட பாக்யராஜ் அதிகப்படியான சம்பளத்தை கொடுப்பார். அதனால்தான் வாலி சில நேரங்களில் பொறுமையாக இருந்து பாடல் எழுதிக் கொடுத்து உள்ளதாக கூறியுள்ளார். மேலும் பாக்கியராஜ் பாடலில் உள்ள வரிகள் முதல் கொண்டு அனைத்தையும் தெரிந்துகொண்டு விட்டு தான் அந்த பாடலை உருவாக்குவார் எனவும் தெரிவித்துள்ளார்.

Also read: எப்படியாவது வளர்த்துவிட வேண்டும்.. 2 வாரிசுகளுக்காகவும் இயக்குனர் பாக்யராஜ் போடும் ஸ்கெட்ச்

Trending News