ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

ஈஸ்வரி இடம் மாட்டிக் கொண்டு தவிக்கும் பாக்யா மருமகள்.. வீட்டை விட்டு போக நினைக்கும் எழில்

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், ஜெனி கர்ப்பமாக இருக்கிறார் என்பதை உறுதி செய்த பாக்கியா குடும்பம் ஒட்டுமொத்த சந்தோஷத்தில் இருக்கிறார்கள். அதிலும் ஈஸ்வரி, இதுதான் சான்ஸ் என்று ஜெனியை தலையில் தூக்கி வைத்து ஆடி அமிர்தாவை நோகடித்து மனது புண்படும்படி பேசி குத்தி காட்டுகிறார். அந்த வகையில் ஈஸ்வரி எப்போதும் திருந்தவே மாட்டார் என்று சொல்வதற்கு ஏற்ப வீட்டில் அராஜகம் பண்ணி வருகிறார்.

அது மட்டும் இல்லாமல் இவருடைய குணம் தான் கோபிக்கும் இருக்கிறது என்று சொல்வதற்கு ஏற்ப இருவரும் ஒருத்தருக்கு ஒருத்தர் சலிச்சவங்க இல்லை என்பதற்கு ஏற்ப நடந்து கொள்கிறார்கள். பாவம் மாமியாரையும் எதுவும் சொல்ல முடியாமல் மருமகளுக்கும் உதவி பண்ண முடியாமல் இக்கட்டான சூழ்நிலையில் பாக்யா சப்போர்ட் செய்து கொண்டு வருகிறார்.

கொஞ்சம் கூட திருந்தாமல் மறுபடியும் ஈஸ்வரி போடும் ஆட்டம்

இது மட்டுமில்லாமல் ஒவ்வொரு முறையும் அமிர்தா கண்ணில் படும்பொழுதெல்லாம் ஈஸ்வரி குடும்பம் என்றால் இப்படித்தான் இருக்கணும். காலகாலத்துக்கு ஒரு குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும். ஏற்கனவே உன் முன்னாள் புருஷன் இது என் பொண்டாட்டி பிள்ளை என்று வீட்டில் வந்து நிறைய பிரச்சனை பண்ணி ரணகளப்படுத்தி விட்டார். இப்போது ஜெயிலுக்கு போனவன் மறுபடியும் வீட்டுக்கு வந்து பிரச்சனை பண்ணினால் என்ன பண்ணுவது.

இதுக்கு தான் சொல்றேன் உனக்கும் எழிலுக்கும் ஒரு குழந்தை பிறந்து விட்டால் பிரச்சினை எல்லாம் சரியாகிவிடும். நீயும் காது கொடுத்து எதுவும் கேட்க மாட்டிக்க, உன் புருஷனும் கனவு லட்சியம் என்று ஊரை சுற்றுகிறான். இதெல்லாம் எங்கே போய் முடிய போகிறதோ என்று அமிர்தாவை பார்த்து ஈஸ்வரி வார்த்தையாலே துன்புறுத்துகிறார்.

உடனே பாக்கியா, அமிர்தாவுக்கு சப்போர்ட் ஆக பேசினாலும் ஈஸ்வரியை மீறி எதுவும் பண்ண முடியாமல் தவிக்கிறார். இப்படி தொடர்ந்து நிம்மதி இல்லாமல் தவிக்கும் அமிர்தாவின் நிலைமையை எண்ணி எழில் இந்த வீட்டை விட்டு போகலாம் என்று முடிவு எடுக்கப் போகிறார். பிறகு இந்த ஒரு சென்டிமெண்டை வைத்து சில காட்சிகள் நடைபெறும்.

அத்துடன் எழில் எடுத்த முடிவுக்கு பாக்கியா எதிர்ப்பு தெரிவித்து அவர்களை சமாதானப்படுத்தி மறுபடியும் அதை வீட்டில் இருக்க வைப்பார். இப்படி தொடர்ந்து ஈஸ்வரி கொடுக்கும் டார்ச்சரால் ஜெனி மனசும் கொஞ்சம் கொஞ்சமாக மாறிக்கொண்டு அமிர்தாவை விரோதி மாதிரி பார்க்க வைக்க போகிறது. இந்த ஈஸ்வரியால் நல்லா ஒற்றுமையாக இருந்த அமிர்தாவுக்கும் ஜெனிக்கும் இடையில் பிரச்சினை வரப்போகிறது.

பாக்கியலட்சுமி சீரியலில் நடந்த சம்பவங்கள்

Trending News