வியாழக்கிழமை, மார்ச் 13, 2025

கோபியுடன் இருந்ததால் சைக்கோவாக மாறிய பாக்யாவின் வாரிசு.. கோபத்தில் இனியா எடுக்கப் போகும் முடிவு

Bhakkiyalakhsmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், இனியாவிடம் இனி பேசிப் பழக வேண்டாம், படிப்பில் மட்டும் கவனம் செலுத்தி வருவோம் என்று சொல்வதற்காக ஆகாஷ், இனியாவிற்கு ஃபோன் பண்ணுகிறார். ஆனால் இனியாவின் போன் கோபியிடம் இருந்ததால் ஆகாஷ் போன் பண்ணுவதை செழியன் பார்த்து விடுகிறார்.

உடனே இன்னும் அந்த ஆகாஷ் திருந்தவில்லை, எப்படியாவது நம் வீட்டுப் பிள்ளையை மடக்கி பெரியாளாக மாறிவிடலாம் என்று பேராசைப்படுகிறான். அவனுக்கு இப்பொழுது நான் பாடம் கற்றுக் கொடுக்கணும் என்று செழியன் கோபத்தில் கொந்தளிக்கிறார்.

இதைக் கேட்டதும் கோபி, கூட நானும் வருகிறேன் என்று சொல்லி செல்வி வீட்டுக்கு போய் விடுகிறார். அங்கே போனதும் ஆகாஷை கூப்பிட்டு வார்த்தையாலே காயப்படுத்தியது மட்டுமில்லாமல் அடிதடியில் இறங்கி கையை முறித்து சைக்கோ மாதிரி ஆகாஷ் இடம் நடந்து கொண்டார்.

இதை பார்க்கும் பொழுது கோபி புத்தி மாதிரி செழியன் இருக்கிறான் என்பதற்கு ஏற்ப தான் முழு சைக்கோவாக செழியனின் செயல்கள் இருந்தது. உடனே பக்கத்தில் இருப்பவர்கள் ஆஸ்பத்திரியில் ஆகாசை சேர்த்து விட்டு செல்விக்கு போன் பண்ணி தகவலை சொல்கிறார்கள்.

பதட்டமடைந்த செல்வி, பாக்யாவை கூட்டிட்டு வீட்டிற்கு ஹாஸ்பிடலுக்கு போகிறார். இதற்கெல்லாம் காரணம் செழியன் மற்றும் கோபி தான் என்று தெரிந்து கொண்ட பாக்கியா ஆவேசமாக வீட்டிற்கு வந்து செழியன் இடம் கோபமாக ஏன் இப்படி பண்ணினாய் என்று கேட்கிறார்.

உடனே செழியன் நான் பண்ணியதில் என்ன தவறு இருக்கிறது, அவனை அடித்தது மட்டுமில்லாமல் அவனை அங்கே வெட்டி போட்டு இருக்கணும் என்று ஒரு ரவுடி மாதிரி பேச ஆரம்பித்து விட்டார். இதனால் கோபப்பட்ட பாக்கியம், செழியனை அடிக்க கை ஓங்கி விட்டார். ஆனால் ஜெனி என்ன அத்தை பண்றீங்க என்று கேட்டு கொஞ்சம் கோபமடைந்து விட்டார்.

ஆனாலும் செழியன் செய்ததில் எந்த தவறும் இல்லை என்று சொல்வதற்கு ஏற்ப ஈஸ்வரி மற்றும் கோபி செழியனுக்கு சப்போர்ட் பண்ணி விட்டார்கள். இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த இனியாவிற்கு மறுபடியும் ஆகாஷ் இடம் பேச வேண்டும் என்று ஆசை வந்து விட்டது. அந்த வகையில் சும்மா இருந்த சங்கை ஊதி கெடுத்து பெருசாகுவது போல் இந்த கோபியும் செழியனும் ஆகாஷை சீண்டி இனியா மனசை காயப்படுத்தி விட்டார்.

Trending News