புதன்கிழமை, ஜனவரி 15, 2025

பழனிச்சாமி காதலில் இடியை இறக்கப்போகும் பாக்யாவின் வாரிசு.. கோபி ராதிகா இடையில் ஏற்படும் விரிசல்

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், ஈஸ்வரியை கெஞ்சி சமாதானப்படுத்தி கோபி ராதிகாவின் வீட்டிற்கு கூட்டிட்டு வருகிறார். இதை எதிர்பார்க்காத ராதிகாவின் அம்மா கோபியிடம் உங்க அம்மா எப்படி இங்கு வர சம்மதித்தார்கள் என்று கேட்கிறார். அதற்கு கோபி ஏன் எங்க அம்மா இங்க வராம போயிருவாங்கனு நினைச்சீங்களா.

நான் இருக்கும் வரை என் கூட தான் எங்க அம்மா இருப்பாங்க. நீங்க யாரும் அவர்களை கவனிக்க வேண்டாம். நானே பார்த்துக்கொள்கிறேன் என்று சொல்லி கோபி, அம்மாவை பத்திரமாக ரூமுக்கு கூட்டிட்டு போய் ரெஸ்ட் எடுக்க வைத்துவிட்டு ரெஸ்டாரண்டுக்கு போகிறார். ஆனால் அங்கே போனதும் சமைப்பவர்கள் வரவில்லை லீவு என்று சொன்னதும் டென்ஷன் ஆகி கோபியை அனைத்து வேலைகளையும் பார்க்கும் படியாக அமைந்து விட்டது.

ராதிகாவை நம்பாத கோபி

அடுத்ததாக பாக்யா, வீட்டில் இருப்பவர்களுக்கு உணவு சமைத்து கொடுக்கிறார். ஆனால் ஏதோ ஒரு கவலையில் இருப்பது போல் செழியன் உணர்ந்து என்ன என்று கேட்கிறார். அதற்கு அத்தை நினைத்தால் ரொம்பவே கவலையாக இருக்கிறது. மறுபடியும் இதே மாதிரி ஏதாவது ஒரு பிரச்சினை வந்தால் அவர்களால் தாங்க முடியாது. அதனால் தான் ரொம்ப கவலையாக இருக்கிறது என்று சொல்கிறார்.

உடனே செழியன் மற்றும் எழில் பாக்கியவை சமாதானப்படுத்துகிறார். பிறகு பாக்யா ஹோட்டலில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது இவரை சந்திப்பதற்காக பழனிச்சாமி வருகிறார். வழக்கம்போல் பாக்யாவை பார்த்ததும் பழனிச்சாமி முகத்தில் அவ்வளவு சந்தோஷம் காதல் தெரிகிறது. ஆனால் இது எதுவும் தெரியாத பாக்யா பழனிச்சாமிடம் எதார்த்தமாக பழகுகிறார்.

அடிக்கடி பாக்கியாவை பார்த்து பேசுவதற்கு வாய்ப்பாக இருக்கும் என்பதற்காக பழனிச்சாமி பாக்கியா நடத்தி வரும் ஹோட்டல் பக்கத்திலேயே ஒரு பிசினஸ் ஆரம்பிக்கப் போகிறார். இதை சொன்னதும் பாக்யா ரொம்பவே சந்தோஷப்பட்டு என்ன உதவி வேண்டுமானாலும் நான் பண்ணுகிறேன் என்று இரண்டு பேரும் பேசிக் கொள்கிறார்கள்.

இவர்கள் பேசுவதை பார்த்த செல்வி அக்கா ரெண்டு பேரும் ஒரு ரூட்டுக்கு வந்து விட்டார்கள் நடக்கட்டும் என்று சொல்லிக் கொண்டு போய் விடுகிறார். ஆனால் பாக்யா மற்றும் பழனிச்சாமிக்குள் ஒரு பிரச்சனை வெடிக்க போகிறது என்றால் அது இனியா மூலமாக இருக்கப்போகிறது. அதாவது இனியாவை அடிக்கடி பழனிச்சாமியின் அக்கா பையன் சந்தித்து பேசுகிறான்.

அந்த வகையில் இவர்களுடைய காதல் தெரிய வரும் பொழுது பழனிச்சாமி காதல் சுக்கு நூறாக உடைய போகிறது. அதே நேரத்தில் பழனிச்சாமி மனதில் என்ன இருக்கிறது என்று பாக்யா தெரிந்துகொண்டு ஆரம்பத்திலேயே அதை தடுத்துவிட்டால் இன்னும் இவர்களுடைய பிரண்ட்ஷிப் வலுவாக அமையும். இதனைத் தொடர்ந்து கோபி, அம்மாவிற்கு சாப்பாடு எடுத்துக்கொண்டு வீட்டிற்கு வருகிறார்.

ஆனால் அதற்குள் ராதிகா அத்தை ஏன் வெளியே வரவில்லை என்று ரூமுக்கு போய் பார்த்து பேசுகிறார். உடனே உடம்பு ஏது சரியில்லாமல் இருக்குமா என்று கழுத்தில் கை வைத்து பார்க்கும் அந்தத் தருணத்தில் கோபி வந்து பார்த்து தவறாக புரிந்து கொள்கிறார். ஏய் என்ன பண்ணுகிறாய் என்று ராதிகாவை தள்ளிவிட்டு அம்மா பக்கத்தில் போய் நின்று எதுக்கு எங்க அம்மா கழுத்துல கை வைக்கிற என்று கேட்கிறார்.

அதற்கு ராதிகா இல்ல காய்ச்சல் ஏதாவது அடிக்குதா என்று பார்ப்பதற்காக தொட்டுப் பார்த்தேன் என்று சொல்கிறார். ஆனால் ராதிகாவை நம்பாத கோபி அவரை தவறாக புரிந்து கொண்டு அவமானப்படுத்தி விட்டார். இப்படியே போனால் கோபி மற்றும் ராதிகா இடையில் விரிசல் வர வாய்ப்பு இருக்கிறது.

பாக்கியலட்சுமி சீரியலில் முந்தைய சம்பவங்கள்

Trending News