வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

திருந்தாத இனியாவால் மறுபடியும் பாக்யாவுக்கு வரும் பிரச்சினை.. வன்மத்துடன் திரியும் கோபி

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், ஈஸ்வரி இனியாவை காலேஜுக்கு டிராப் பண்ண போகிறார். இதை பார்த்த கோபி, அம்மாவிடம் பேசும் விதமாக மன்னிப்பு கேட்டு கெஞ்சுகிறார். ஆனால் கண்டுகொள்ளாத ஈஸ்வரி காலேஜுக்கு இனியாவைவை கூட்டிட்டு போய் விடுகிறார். ஆனால் விடாமல் கோபி அங்கேயும் சென்று ஈஸ்வரிடம் தனக்கு ஏற்பட்ட அவமானத்தையும் அசிங்கத்தையும் சொல்லும் விதமாக பேசுகிறார்.

ரொம்பவே நான் நொந்து போய்விட்டேன், என் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு. என்னை ரொம்ப நோகடித்து விட்டீர்கள் என்று சொல்லி புலம்புகிறார். ஆனால் இதற்குக் ஈஸ்வரி, நீ புலம்புவது கூட என் காதில் கேட்கவில்லை அந்த அளவுக்கு நீ எனக்கு முக்கியமானவன் இல்லை என்று சொல்லி கிளம்பி விடுகிறார். இதனால் ஒட்டுமொத்தமாக வெறிகொண்டு திரியும் கோபி வீட்டிற்கு வந்து ராதிகாவிடம் நடந்த விஷயத்தை சொல்லுகிறார்.

தாத்தா சொன்ன வார்த்தைக்காக இனியா எடுத்த முடிவு

ராதிகா, கோபிக்கு ஆறுதல் சொல்லும் விதமாக நடந்ததே யோசித்து நம்ம வாழ்க்கையை நாம் வீணாக்க வேண்டாம். உங்களுக்காக நானும் மயூவும் இருக்கிறோம். இனி அவர்கள் விஷயத்தில் நாம் தலையிட வேண்டாம், அவர்கள் யாரோ நாம் யாரோ என்று ஒதுங்கிக் கொள்ளலாம் என்று ராதிகா அட்வைஸ் பண்ணுகிறார். அதற்கு கோபி, அப்படி எல்லாம் சும்மா விட முடியாது.

இதுக்கெல்லாம் காரணம் அந்த பாக்கிய தான், அந்த பாக்கியாவை நான் ஒன்னும் இல்லாமல் ஆக்கி நடுத்தெருவில் நிற்க வைப்பேன். அப்பொழுதுதான் என்னுடைய வேதனையும் வலியும் அனைவருக்கும் புரியும் என்று ராதிகாவிடம் சொல்கிறார். ஆனால் ராதிகா, கோபி சொல்வதை சீரியஸாக எடுத்துக் கொள்ளாமல் சமாதானப்படுத்தி விட்டு போய்விடுகிறார்.

அடுத்ததாக பாக்கியாவின் ஹோட்டலுக்கு வரும் பழனிச்சாமி, பாக்கியா கொஞ்சம் கூட நேரமில்லாமல் உழைத்துக் கொண்டிருப்பதை பார்த்து இந்த ஹோட்டலுக்கு தேவையான ஒரு செப் போட்டு விடுவோம். நாம் இருந்த இடத்தில் இந்த மாதிரி சாப்பாடு வேணும் என்று சொன்னால் போதும் அவர்கள் அனைத்தையும் பார்த்துக் கொள்வார்கள் என்று பழனிச்சாமி ஐடியா கொடுக்கிறார்.

இதைக் கேட்ட பாக்கியாவும் சரி அப்படி என்றால் ஒரு நல்ல செப் இருந்தா சொல்லுங்கள் நான் போடுகிறேன் என்று சொல்கிறார். இதனை அடுத்து தனியாக போன எழில் மற்றும் அமிர்தா தற்போது தான் நிம்மதியான வாழ்க்கை வாழும் படி மனசு விட்டு பேசி ரொமான்ஸ் பண்ணிக் கொள்கிறார்கள். அடுத்ததாக இனியா காலேஜில் டான்ஸ் போட்டி நடக்கப் போகிறது.

இதில் கலந்து கொள்ள இனியாவின் நண்பர்கள் கூப்பிடுகிறார்கள். ஆரம்பத்தில் இனியா வேண்டாம் என்று தயங்கினாலும் தாத்தா சொன்னபடி நம்மால் பெருமை சேர்க்க வேண்டும். எல்லோரும் நம்மளை நினைத்து புகழ்ந்து கைதட்ட வேண்டும் என்று சொன்னார். அதனால் இந்த டான்ஸ் போட்டியில் கலந்து கொண்டு எல்லோரும் நம்மளை பாராட்டி பப் விஷயத்தை மறக்கடிக்கும் விதமாக நம் வெற்றி பெற்று காட்ட வேண்டும் என்று முடிவெடுக்கிறார்.

ஆனால் எந்த ஒரு விஷயத்தை இனியா செய்தாலும் அதில் பிரச்சனை தான் வரும். அதிலும் கடைசியில் பாக்கிய மேலே தான் எல்லா பழியும் விழும். அந்த வகையில் தற்போது இனியா எடுக்கப் போகும் முடிவால் பாக்கியாவிற்கு இன்னொரு பிரச்சினை வெடிக்க போகிறது. இதுதான் சான்ஸ் என்று கோபி உள்ளே புகுந்து பாக்யாவை பழிவாங்க வாய்ப்பாக அமையப் போகிறது.

பாக்கியலட்சுமி சீரியலில் நடந்த சம்பவங்கள்

Trending News