ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

பாண்டியனிடமிருந்து தங்கமயிலை காப்பாற்ற வரும் பாக்கியம்.. கதிர் மீது விழுந்த திருட்டுப் பழிக்கு முடிவு கட்டிய ராஜி

Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், கதிர் பணத்தை எடுத்ததால் பாண்டியன் வீட்டிற்கு வந்து ருத்ரதாண்டவம் ஆடிவிட்டார். அத்துடன் என்னிடமிருந்து திருடிய பணத்தை எனக்கு நாளைக்கு கொடுத்தாக வேண்டும் என்று கெடு வைத்திருக்கிறார். இதனால் தம்பியை இந்த பிரச்சினையில் இருந்து காப்பாற்ற வேண்டும் என்று செந்தில், சரவணன் மற்றும் பழனிச்சாமி போன்ற ஒவ்வொருவரும் தெரிந்தவர்களிடம் பணம் கேட்டு போன் பண்ணி விசாரிக்கிறார்கள்.

ஆனால் இவ்வளவு நடந்தும் எதுவுமே நடக்காத போல் கூலாக கதிர் வருகிறார். வந்ததும் அண்ணன்களிடம் நீங்கள் இவ்வளவு டென்ஷன் ஆக வேண்டாம். அப்பா எப்போதுமே ஒரு பிரச்சனை என்றால் அதற்கு காரணம் நான் தான் என்று கண்மூடித்தனமாக என் மீது கோபப்படுவது வழக்கம்தான். ஏன் என்னவென்று கூட விசாரிக்காமல் என்னை சின்ன வயசுல இருந்து உருப்படாதவன், திருடன் என்று பல நேரத்தில் பழி சுமத்திருக்கிறார்.

அதனால் எனக்கு இது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை. நீங்கள் என்ன நினைத்து கவலைப்பட வேண்டாம். எதுவாக இருந்தாலும் நான் சமாளித்துக் கொள்கிறேன் என்று கதிர் மற்றவர்களுக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருக்கிறார். இந்த நேரத்தில் ராஜி இவர்கள் பேசியதை அனைத்தையும் கேட்டு விட்டார். அப்பொழுதுதான் கதிர் மீது எந்த தவறும் இல்லை அண்ணனுக்காக பணத்தை எடுத்து இருக்கிறார் என்பது தெரிந்து விட்டது.

அடுத்ததாக சரவணன் ரூம்குள் போனதும் தங்கமயில் உங்க தம்பி பணத்தை திருடி இருக்க கூடாது தப்புதான். என்ன செலவுக்கு தேவைப்பட்டாலும் அதை மாமாவிடம் கேட்டு வாங்கிருக்கலாம். அதை விட்டுவிட்டு மாமாவுக்கு தெரியாமல் பணத்தை எடுத்தது தவறு தான் என்று கதிரை தவறாக சரவணன் இடம் சொல்லுகிறார். இதை கேட்டு கோபப்பட்ட சரவணன், அவன் பணத்தை எடுத்தது ஒன்னும் அவனுக்காக இல்ல. எல்லாம் நீ செய்த தவறுக்காக நமக்காக தான் எடுத்திருக்கிறான் என்று சொல்கிறார்.

ஆமாம் நீ ஹனிமூன் போகும் பொழுது அஜாக்கிரதையால் ஹோட்டலை புக் பண்ணி விட்டாய். அப்பொழுது வெளியே நின்று புலம்பிய பொழுது கதிர் பணத்தை அனுப்பி வைத்தது எப்படி என்று கொஞ்சம் கூட யோசிக்கவில்லை. அது அவன் அப்பாவின் பணத்தில் இருந்து தான் அனுப்பி வைத்திருக்கிறான் என்று சொல்லுகிறார். இதைக் கேட்டு அதிர்ச்சியான தங்கமயில், அப்படி என்றால் தம்பி பாசத்தில் மாமாவிடம் எல்லா உண்மையும் என் வீட்டுக்காரர் சொல்லிவிடுவார் என்று பயப்பட ஆரம்பித்து விட்டார்.

அந்த வகையில் நடந்த உண்மை அனைத்தையும் பாக்கியத்திற்கு போன் பண்ணி தங்கமயில் சொல்லிவிடுவார். மறுநாள் பிரச்சனை நடக்கும் பொழுது சரவணன் எல்லா உண்மையும் சொல்லிய நிலையில் பாண்டியன், தங்கமயில் மீது கோபப்படுவார். ஆனால் அந்த நேரத்தில் பாக்கியம் உள்ளே புகுந்து விடுவதால் தங்கமயில் மீது எந்த பிரச்சினையும் வராமல் பார்த்து விடுவார்.

ஆனால் இந்த பிரச்சினையை ராஜி சும்மா விடமாட்டார். ஏற்கனவே தன் கணவர் மீது தப்பு இல்லை என்று தெரிந்த நிலையில் மாமாவிடம் இருந்து திட்டு வாங்க கூடாது என்பதற்காக காதில் போட்டு இருந்த நகையை கொடுத்து இதை அடகு வைத்து மாமாவிடம் பணத்தை கொடுத்து விடு என்று சொன்னார். ஆனால் கதிர் வாங்க மறுத்ததால் இந்த பிரச்சினையை அப்படியே விடப்போவதில்லை.

ஏனென்றால் இந்த பிரச்சனை ஆரம்பித்த பொழுது கோமதி இதற்கும் காரணம் ராஜி தான் என்று ராஜியை திட்டினார். அதனால் இந்த ஒரு சான்ஸை மிஸ் பண்ணாமல் கதிர் மீது விழுந்த திருட்டுப்பழியில் இருந்து காப்பாற்றி அத்துடன் டியூஷன் நான் எடுத்தே தீருவேன் என்று பிடிவாதமாக சொல்லி பாண்டியனிடமிருந்து பெர்மிஷனும் வாங்கி விடுவார்.

Trending News