சக்களத்தி சண்டையை விளம்பரப்படுத்தும் விஜய் டிவி.. கோபிக்காக முட்டி மோதிக் கொள்ளும் பாக்யா, ராதிகா

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடர் தற்போது ரசிகர்களை எதிர்பார்ப்பில் ஆழ்த்தியுள்ளது. அதாவது பாக்கியா என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்ற பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இதில் பெரும்பாலானோர் ராதிகாவுக்காக பாக்யா கோபியை விட்டுக் கொடுத்துவிடுவார் என கூறிவருகின்றனர்.

கட்டுன புருஷனை யாரும் விட்டுக்கொடுக்க மாட்டார்கள். அதுவும் தனது தோழியே தனக்குச் சக்களத்தியாக வந்தால் யாருதான் சும்மாவிடுவார். இதனால் தற்போது கோபி குடும்பத்தின் பஞ்சாயத்து ராஜு வீட்டு பார்ட்டியில் நடக்கிறது. கோபிக்காக முட்டி மோதிக்கொண்டு பாக்கியாவும், ராதிகாவும் சண்டை போட்டுக்கொள்கிறார்கள்.

இந்த சண்டை குழாயடி பிரச்சினை அளவுக்கு மாறியதால் ராமர் வந்த சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை ஆரம்பிக்கிறார். பாக்யா, ராதிகா இருவருமே தனக்கு கோபி வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றனர். உடனே கோபியை அழைத்து வரச் சொல்கிறார் ராமர். கோபியின் பதில் படிதான் ராமர் முடிவு சொல்ல இருக்கிறார்.

தற்போது விஜய் டிவியில் பாக்கியலட்சுமி தொடரை தான் ரசிகர்கள் அதிகமாக பார்க்கின்றனர். இதனால் ராஜு வீட்ல பார்ட்டி என்ற நிகழ்ச்சியை விளம்பரப்படுத்துவதற்காக விஜய் டிவியின் டிஆர்பி ஏற்றுவதற்காக இந்த வாரம் பாக்கியா, ராதிகா ஆகியோரை விருந்தினராக அழைத்துள்ளனர்.

அதுமட்டுமல்லாமல் இவர்கள் இருவரையும் சக்களத்தி சண்டை போட்டுக் கொள்ளும் அளவிற்கு மூட்டிவிட்டு ஒரு ப்ரோமோவை வெளியிட்டுள்ளனர். இதை பார்த்த பாக்கியலட்சுமி தொடர் ரசிகர்களுக்கு கண்டிப்பாக இந்நிகழ்ச்சியை தவறாமல் பார்க்கவேண்டும் என்ற எண்ணம் வருகிறது.

அண்மையில் இதேபோல் விஜய் டிவியின் டிஆர்பியை ஏற்றுவதற்காக பாரதி கண்ணம்மா மற்றும் ராஜா ராணி தொடர் இணைத்து மகா சங்கமமாக ஒளிபரப்பி வருகிறது. தற்போது புது யுக்தியாக பாக்கியலட்சுமி தொடரை கையில் எடுத்துள்ளது விஜய் டிவி. இதனால் இந்த வார விஜய் டிவியின் டிஆர்பி எகிறும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →