சனிக்கிழமை, டிசம்பர் 28, 2024

செழியனின் கன்னத்தை பழுக்க வைத்த பாக்யா.. அப்பனுக்கு புள்ள தப்பாம பிறந்திருக்கு!

Bhakkiyalakshmi serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடரில் இப்போது செழியனின் வாழ்க்கையில் புயல் காற்று வீசத் தொடங்கி இருக்கிறது. அதாவது காதல் மனைவி ஜெனி இருக்கும்போது தன்னுடைய அலுவலகத்தில் பணி புரிந்த மாலினி என்பவருடன் செழியன் நெருங்கி பழகிவந்தார். ஒரு கட்டத்தில் மாலினியின் டார்ச்சரால் செழியன் என்ன செய்வது என்று தெரியாமல் நிலைகுலைந்து போனார்.

மேலும் தன்னுடன் பழகியதை சாக்காக வைத்து மாலினி செழியனை பிளாக்மெயில் செய்ய ஆரம்பித்து விட்டார். இந்த விஷயம் பாக்யாவுக்கு தெரிய வர ஆரம்பத்தில் தன்னுடைய மகன் மீது எந்த தப்பும் இல்லை என்பது போல நினைத்திருந்தார். ஆனால் இப்போது அவரது குட்டு வெளியாகிய அப்பனுக்கு பிள்ளை தப்பாமல் பிறந்திருக்கிறது என்பதை பாக்யா உணர்ந்து விட்டார்.

அதாவது செழியன் மாலினி உடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை காட்டிவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த பாக்யா பத்ரகாளியாக மாறி வீட்டுக்கு வருகிறார். அந்தச் சமயத்தில் இனியாவுக்கு உடம்பு சரியில்லாமல் இருந்ததால் எல்லோரும் அவரை கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். பாக்யாவும் அவரை தூங்க வைத்து விட்டு செழியினை தனியாக அழைத்து வருகிறார்.

Also read: குணசேகரனை வாய் அடைக்க வைத்த அப்பத்தா.. பொறிவைத்து தூக்கப் போகும் ஜீவானந்தம்

இந்த சூழலில் பாக்யாவிடம் செழியன் மலுப்பினாலும் உண்மையை அறிந்தவுடன் அவரின் கன்னத்தை பழுக்க வைத்துவிட்டார். ஜெனி கிட்ட அப்படி என்ன குறை இருக்கு என மகனை விளாசி எடுக்கிறார். மேலும் இதனால் பெரிய பிரச்சினையை வெடிக்க இருக்கிறது என்று செழியனிடம் பாக்யா எச்சரித்து விட்டு அங்கிருந்து செல்கிறார்.

இதைதொடர்ந்து இப்போது மாலினி கர்ப்பம் என்று பாக்யாவின் வீட்டுக்கு வந்து பிரளயத்தையே கிளப்ப இருக்கிறார். ஆகையால் பாக்கியலட்சுமி குடும்பத்தில் பெரும் சர்ச்சை ஏற்பட இருக்கிறது. அதோடு மட்டுமல்லாமல் ஜெனி இந்த விஷயம் தெரிந்தால் கண்டிப்பாக செழியனை விட்டு பிரிவதற்கு முடிவெடுப்பார்.

ஆகையால் ஏற்கனவே பாக்யாவின் குடும்ப வாழ்க்கை தான் ராதிகாவால் நாசமாகிவிட்டது. மற்றொருபுறம் எழிலின் மனைவி அமிர்தாவின் முன்னாள் கணவர் கணேஷ் வந்திருக்கிறார். இதனால் இப்போது எழிலின் வாழ்க்கையும் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது. செழியனின் வாழ்க்கையிலும் மிகப்பெரிய குழப்பம் ஏற்பட்டிருக்கிறது.

Also read: பூதாகரமாக வெடிக்கப் போகும் அமிர்தாவின் பிரச்சனை.. பாக்யா எடுக்கப் போகும் முடிவு என்ன?

Trending News