வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

Pandian Stores 2: கடனை கட்டி கோமாளியாக மாறப்போகும் ஏமாளி பாண்டியன்.. சரவணன் தலையில் மண்ணை அள்ளி போடும் குடும்பம்

Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், பாண்டியன் நினைத்தபடி சரவணனுக்கு கல்யாணம் நடக்கப் போகிறது என்ற சந்தோசத்தில் கண்ணுமுன்னு தெரியாமல் ஓவராக ஆடுகிறார். ஆனால் இவர்தான் இப்படி இருக்கிறார் என்றால் ஒட்டுமொத்த குடும்பமும் சேர்ந்து தங்கமயிலின் குடும்பத்தை கண்மூடித்தனமாக நம்புகிறார்கள்.

பாவம் இதில் மீனாவிற்கு மட்டும் ஆரம்பத்தில் இருந்து தங்கமயிலின் குடும்பத்தின் மீது ஏதோ ஒரு சந்தேகம் இருக்கிறது. ஆனால் இதை மீனா சொல்லியும் கூட யாரும் காது கொடுத்து கேட்காமல் அலட்சியப்படுத்தி விட்டார்கள். அந்த வகையில் சரவணன் கல்யாணத்துக்கு பிறகு பாண்டியன் குடும்பத்தில் ஒவ்வொருவரும் அவமானத்தையும் அசிங்கத்தையும் சந்திக்கப் போகிறார்கள் என்பது உறுதியாகிவிட்டது.

போதாக்குறைக்கு பாண்டியன் என்னமோ ஊரில் இல்லாத குடும்பத்தில் சம்பந்தம் வைத்து விட்டார் என்று மச்சான்களிடம் ஓவர் அலப்பறை காட்டி பந்தா பண்ணுகிறார். இதனைத் தொடர்ந்து கல்யாணத்தை நடத்துவதற்காக பாண்டியன் குடும்பத்தில் இருப்பவர்கள் அனைவரும் பெண் வீட்டிற்கு போகிறார்கள்.

பாண்டியின் தலையில் மிளகாய் அரைக்க போகும் பாக்கியம்

ஆனால் இதற்கிடையில் தங்கமயில் வீட்டிற்கு கடன் கொடுத்தவர்கள் சென்று கடனை கேட்டு பாக்கியாவிடம் சண்டை போடுகிறார்கள். இந்த சூழ்நிலையில் பாக்கியம் அவர்களிடம் என் பொண்ணு கல்யாணம் முடிந்த கையுடன் ஒரு வாரத்திற்குள் உங்களுக்கு கொடுக்க வேண்டிய கடனை கொடுத்து விடுகிறேன் என்று கெஞ்சுகிறார்.

ஆனால் கடன் கொடுத்தவர்கள் எதுவும் காது கொடுத்து கேட்காமல் இந்த சூழலையே விட்டுவிட்டால் கடனை திரும்ப பெற முடியாது என்று பாக்கியம் வீட்டிற்குள் நுழைந்து பணத்தை வாங்காமல் நான் இங்கிருந்து கிளம்ப மாட்டேன் என்று உள்ளே போய் விட்டார்கள். இதனை எல்லாம் பார்த்த தங்கமயில் தலையில் கையை வைத்துக் கொண்டு அவ்வளவு தான் இனி எனக்கு கல்யாணம் நடக்காது என்று புலம்ப ஆரம்பிக்கிறார்.

இப்படி எல்லாம் ஒரு பக்கம் நடக்க இந்த நேரத்தில் பாண்டியன் வீட்டார்கள் பெண் வீட்டிற்கு வந்து விடுகிறார்கள். அப்பொழுது கடன் கொடுத்தவர்கள் கடனை ஒழுங்காக அடைக்க முடியல இதுல கல்யாணம் வேற கேக்குதா என்று சொல்லுவதை பாண்டியன் குடும்பத்தில் உள்ளவர்கள் கேட்டு விடுகிறார்கள்.

பிறகு வழக்கம்போல் இந்த கடன் எல்லாம் கல்யாணத்துக்காக தான் வாங்கினேன் என்று பாக்கியம் பொய்ப் பித்தலாட்டம் பண்ணி பாண்டியன் தலையில் மிளகாய் அரைக்க போகிறார். இந்த ஏமாளி பாண்டியன் கொஞ்சம் கூட யோசனை இல்லாமல் கடனை கொடுத்து கோமாளியாக நிற்கப் போகிறார். பாவம் பெண்வீட்டர்களை பற்றி கொஞ்சம் கூட விசாரிக்காமல் பாண்டியன் அவருடைய மகன் தலையில் மண்ணை வாரி போடும் வகையில் கல்யாணத்தை நடத்தி வைக்கப் போகிறார்.

பிறகு அந்த குடும்பம் பாண்டியன் வீட்டிற்குள் நுழைந்த பிறகு தான் புதுப்புது கச்சேரியை ஆரம்பமாக போகிறது. எதுக்கெடுத்தாலும் நான் பார்த்து வைக்கிற பொண்ணு குடும்பத்துக்கு ஏத்த மாதிரி இருக்கும் என்று சொல்லிய பாண்டியனுக்கு பெரிய ஆப்பாக இருக்கப் போகிறது. அது மட்டுமில்லாமல் பாண்டியனின் நிலைமையை பார்த்து மச்சான்களும் கை கொட்டி சிரிக்கப் போகிறார்கள்.

Trending News