செவ்வாய்க்கிழமை, ஜனவரி 14, 2025

திரும்பவும் புருஷனை கூட்டி கொடுக்க போகும் பாக்கியா.. இதெல்லாம் ஒரு பொழப்பா

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியல் வருகிற எபிசோடுகளில் உணர்ச்சிப்பூர்வமாக இருக்கிறது. அதாவது பாக்கியா வீட்டில் யாரும் இல்லாத போது ஜெனி படியில் இருந்து கீழே இறங்கும்போது வழுகி விழுந்து விடுகிறார். அந்த நேரத்தில் அவர் உதவிக்காக ஒவ்வொருவருக்கும் போன் செய்தும் யாரும் பேசவில்லை. அப்பொழுது அங்கே இருந்த ராதிகா, ஜெனி உனக்கு என்ன ஆச்சு என்று கேட்கிறார்.

அப்பொழுது இந்த மாதிரி நான் கீழே விழுந்து விட்டேன் எனக்கு ரொம்ப பயமாக இருக்கிறது என் பாப்பாக்கு ஏதாவது ஆகுமோ என்று பயத்தோடு கேட்கிறார். இவருக்கு ஆறுதல் கூறும் விதமாக ராதிகா நீ எதை நினைத்தும் கவலைப்படாதே நான் ஆஸ்பத்திரிக்கு கூட்டிப் போகிறேன் என்று இவர் கூடவே இருந்து எல்லா ட்ரீட்மெண்டையும் பார்க்கிறார். பிறகு ராதிகா பாக்கியாவிற்கு போன் பண்ணி அனைத்தையும் சொல்கிறார்.

Also read: உயிரைக் காப்பாற்றும் ராதிகா.. உருட்டுறதுக்கு கதையில்லாமல் சன் டிவியை பாலோ செய்யும் விஜய் டிவி

இதற்கு அடுத்து அனைவரும் வீட்டிற்கு வந்த பொழுது ஈஸ்வரி, ராதிகாவை தவறாக புரிந்து கொண்டு நீதான் ஜெனியை கீழே தள்ளி விட்டாயா என்று கேட்கிறார். உடனே பாக்கியா, அவருடைய அத்தை இடம் ராதிகா தான் ஜெனியை அந்த இக்கட்டான சூழ்நிலையில் இருந்து காப்பாற்றி ஆஸ்பத்திரிக்கு கொண்டு போய் எல்லாத்தையும் கூடவே இருந்து பார்த்திருக்கிறார்கள் என்று சொல்கிறார்.

பிறகு வருகிற எபிசோடுகளின் ப்ரோமோ படி ராதிகாவிடம் பாக்கியா பேசப் போகிறார். அதாவது நீங்க எவ்வளவு கெத்தா ஒரு பாசிட்டிவ் வைப்ரேஷன் உங்ககிட்ட இருந்துச்சு. உங்கள பாத்து தான் நானே என்னை மாத்திக்கணும். இந்த மாதிரிதான் நம்மளும் ஆக வேண்டுமென்று என்னுடைய ரோல் மாடலாகவே உங்கள தான் நான் நினைத்து ஒவ்வொரு காரியத்தையும் செய்தேன்.

Also read: குணசேகரனிடம் வேஷம் போட்டு கவுக்கும் மருமகள்கள்.. குடும்பத்துடன் போடும் சதி வேலைகள்

அப்படி பார்த்த ராதிகாவை இப்பொழுது எல்லாத்தையும் இழந்து விட்டு நிற்கிற மாதிரி எனக்கு பார்க்கவே ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. எல்லா விஷயத்தையும் சரியான முறையில் முடிவு செய்து பிரச்சினைகளை தீர்த்து வைக்கும் அந்த ராதிகாவா இப்பொழுது இந்த மாதிரி ஒரு சூழ்நிலையில் மாட்டிக் கொண்டே எல்லாரிடமும் பேச்சு வாங்கிக் கொண்டு இருக்கீங்க.

உங்களுக்கு இது சரியா தெரிகிறதா என்று எனக்கு தெரியவில்லை. இருந்தாலும் நீங்க என்னுடைய மருமகள் ஜெனியே காப்பாற்றினதற்கு ரொம்ப நன்றி என்று உணர்ச்சிபூர்வமாக பாக்கியா பேசுகிறார். இதைக் கேட்டதும் ராதிகாவும் ரொம்பவே பீல் பண்ணி எல்லா விஷயத்தையும் யோசிக்க ஆரம்பிக்கிறார். ஆனாலும் இந்த ராதிகா ரொம்பவே நல்ல கேரக்டராக தான் இருந்தது. இவரை இந்த அளவுக்கு மாற்றினது இவருடைய அம்மா மற்றும் கோபி தான் என்று சொல்லலாம்.

ஆனா பாக்கியா பேசுவதை வைத்து பார்க்கும் பொழுது இவரே ராதிகா பாவம், எந்த பிரச்சினையும் இனிமேல் வேண்டாம் என்று நினைத்து திரும்பவும் கோபியை கூட்டிக் கொடுக்கப் போகிறார் இதெல்லாம் ஒரு பொழப்பா. எவ்வளவு பட்டம் திருந்தாத பாக்கியா இந்த அளவுக்கு முட்டாளாக இருந்தால் கோபி மாதிரி ஆளுங்க இன்னும் எத்தனை ராதிகாவை தேடி போக போறாங்களோ தெரியவில்லை.

Also read: ஐஸ்வர்யா ஓவர் ஆட்டத்தால் வந்த விளைவு.. இறுதி கட்டத்தை நோக்கி பரபரப்பாக நகரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்

Trending News