திங்கட்கிழமை, டிசம்பர் 16, 2024

திரையில் பாக்யராஜ் கற்றுக் கொடுத்த 5 ரகசியமான விஷயங்கள்.. துணிவு அஜித்திற்கு டப் கொடுத்த ‘ருத்ரா’

தமிழ் சினிமாவில் 90 களின் காலகட்டத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமலஹாசன் தங்களுடைய மாஸ் மற்றும் ஸ்டைலினால் ஆதிக்கம் செலுத்தி கொண்டிருந்தபோது, பெண்கள் செண்டிமெண்ட்டை வைத்தே தன்னுடைய படங்களை நூறு நாட்களுக்கு மேல் ஓட்டி, முன்னணி ஹீரோவாகவும் இருந்தார் திரைக்கதை மன்னன் கே பாக்யராஜ். இவர் மறந்து கிடந்த நிறைய பழைய சென்டிமென்ட் களை தன்னுடைய படங்களின் காட்சிகள் மூலம் மீண்டும் ரசிகர்களுக்கு நினைவுப்படுத்தியதோடு பல ட்ரிக்ஸ்களையும் சொல்லிக் கொடுத்திருக்கிறார்.

ருத்ரா: பாக்யராஜ், கௌதமி மற்றும் லட்சுமி இணைந்து நடித்த திரைப்படம் ருத்ரா. இந்தப் படத்தின் ஆரம்பத்தில் பேங்க் கொள்ளை காட்சி ஒன்று வரும். இப்போதைய பேங்க் திருட்டு காட்சிகளுக்கெல்லாம் உன்னுடைய ருத்ரா படத்தில் அந்த காட்சி தான். நடிகர் அஜித்குமாரின் துணிவு திரைப்படம் ரிலீஸ் ஆன போது தமிழ் சினிமா ரசிகர்கள் மீண்டும் ஒரு முறை இந்தப் படத்தின் இந்த காட்சியை ஞாபகப்படுத்திக் கொண்டனர்.

Also Read:பாக்யராஜ் பதற பதற அடித்த ஊர்வசி.. குழந்தைத்தனமான நடிப்பில் வெளிவந்த 5 படங்கள்

இது நம்ம ஆளு : அந்தக் காலகட்டத்திலேயே குறிப்பிட்ட சமூகத்தினர் செய்யும் தீண்டாமையை உரக்கச் சொல்லியிருந்தார் பாக்யராஜ். இது நம்ம ஆளு திரைப்படத்தில் ஒருவேளை வயிறார சாப்பிடுவதற்காக ஐயர் போல் வேடமிட்டு பூஜையில் கலந்து கொள்ளும் பாக்கியராஜ் பஞ்ச பாத்திரம் என்றால் என்னவென்று தெரியாமல் முழிப்பது சிரிப்பையும், அதே நேரத்தில் சிந்திக்கவும் வைத்திருந்தது.

முந்தானை முடிச்சு : பாக்யராஜுக்கு தமிழ் சினிமாவில் மிகப்பெரிய அடையாளத்தை கொடுத்த திரைப்படம் முந்தானை முடிச்சு. இந்தப் படத்தில் தான் முருங்கைக்காயும் பேமஸ் ஆனது. தான் செய்யாத தவறுக்காக ஊர்வசி தன் மீது பழியை சுமத்தும் பொழுது, அது உண்மை என்றால் என் குழந்தையை தாண்டி செல் என்று பாக்யராஜ் சொல்லுவார். ஊர்வசியும் கொஞ்சம் கூட யோசிக்காமல் கைக்குழந்தையை தாண்டுதோடு அந்தப் படத்தின் இடைவேளை ஆரம்பிக்கும். இந்த காட்சி அப்போது தமிழ் சினிமா ரசிகர்கள் இடையே பெரிதாக பேசப்பட்டது.

Also Read:பலமுறை பார்த்தாலும் சலிப்புதட்டாத பாக்யராஜின் 5 படங்கள்.. தியேட்டர்களுக்கு படையெடுக்க வைத்த முருங்கைக்காய் ஸ்பெஷலிஸ்ட்

ராசுகுட்டி: பாக்யராஜ் நடிப்பில் ராசுகுட்டி திரைப்படம் நகைச்சுவை மற்றும் சென்டிமென்ட் இரண்டும் கலந்து வெளியானது. வீட்டிற்கு ஒரே பிள்ளையாக, செல்லப் பிள்ளையாக இருக்கும் பாக்யராஜ் சிலுக்கு சட்டை மட்டும் வேஷ்டி அணிந்து, புலிப்பல் செயின் போட்டு இருப்பார். புல்லட்டில் வீட்டை விட்டு கிளம்புபவர் வெளியில் போய் சீட்டு விளையாடுவார். இந்த கதாபாத்திரம் அப்போது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்றது.

சின்ன வீடு: பாக்யராஜின் சின்ன வீடு திரைப்படம் நிறைய ஆண்களுக்கு ஒரு பாடமாக இருந்தது. அழகைப் பார்த்து மட்டுமே திருமணம் செய்து கொள்ள ஆசைப்படும் இவர் உடல் பருமனான பெண்ணை திருமணம் செய்து கொள்ளும் விருப்பமில்லாத கல்யாண காட்சியாக இருக்கட்டும், அதன் பின்னர் வேறொரு பெண்ணுடன் தொடர்பு கொண்டு வாழ்க்கையில் மிகப்பெரிய கஷ்டத்தை சந்திப்பதாக இருக்கட்டும் இந்தப் படம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஒரு பெரிய பாடத்தை கற்றுக் கொடுத்தது.

Also Read:காணாமல் போன 2 நடிகர்கள்.. பாக்யராஜின் சூப்பர் ஹிட் படத்தின் வெற்றிக்கு காரணமாக இருந்த ஹீரோக்கள்

- Advertisement -

Trending News