செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

2 சூப்பர் ஹிட் படங்களை மிஸ் பண்ணிய பரத்.. இன்றுவரை நொந்து நூடுல்ஸ் ஆகி விடும் கண்ணீர்

காதல் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான பரத் முதல் படத்திலேயே முத்திரை பதித்தார். ஆனால் அதன் பின்பு பரத் தேர்ந்தெடுத்து நடித்த படங்கள் சரி வர போகவில்லை. தற்போது வரை சினிமாவில் தனக்கான அங்கீகாரம் கிடைக்காமல் பரத் போராடி வருகிறார். அந்த வகையில் 2 சூப்பர் ஹிட் படங்களை வரத் தவற விட்டுள்ளார்.

அந்த இரண்டு படங்களையும் லாவகரமாக பயன்படுத்திக் கொண்ட ஹீரோக்கள் தற்போது முன்னணி நடிகர்களாக உள்ளனர். ஒருவேளை இந்த இரண்டு படங்களிலும் பரத் நடித்திருந்தால் ஓரளவு இப்போது வரை அவரால் சினிமாவில் நிலைத்து நிற்கக்கூடும். அவ்வாறு பரத் தவறவிட்ட படங்களை இப்போது பார்க்கலாம்.

Also Read : மனைவியை கொலை செய்யும் பரத்.. அதிலிருந்து தப்பிக்க உச்சகட்ட பயத்தை காட்டிய லவ் டீசர்

முதலாவதாக பூபதி பாண்டியன் இயக்கத்தில் தனுஷ், பிரகாஷ்ராஜ் கூட்டண வெளியான திருவிடையாடல் ஆரம்பம் படத்தில் முதலில் பரத் தான் நடிப்பதாக இருந்தது. ஆனால் அப்போது இந்த கதை தனக்கு சரியாக புரியவில்லை என்று கூறி இப்படத்தை நிராகரித்து விட்டாராம்.

அதன் பின்பு தான் தனுஷ் இந்த படத்தில் நடித்து பெயரை வாங்கிச் சென்றார். அதேபோல் கேவி ஆனந்த் இயக்கத்தில் மாபெரும் வெற்றி பெற்ற படம் கோ. இந்தப் படமும் முதலில் பரத்திற்கு தான் சென்றுள்ளது. இந்தப் படத்தையும் ஏதோ ஒரு காரணம் சொல்லி நிராகரித்து விட்டார்.

Also Read : சமீபத்தில் தியேட்டரை மிரள வைத்த 5 படங்கள்.. பல பேர் மறந்த பரத்திற்கு மறுவாழ்வு கொடுத்த படம்.!

அதன் பின்பு ஜீவா கோ படத்தில் நடிக்க ஒத்துக் கொண்டு நடித்தார். இந்த படம் ஜீவாவின் கேரியரில் மிக முக்கியமான படமாக அமைந்தது. இந்த இரண்டு படங்களையும் யோசிக்காமல் தவற விட்டு விட்டோமே என்று தற்போது வரை இதை நினைத்து நொந்து நூடுல்ஸ் ஆகி பரத் கண்ணீர் விட்டு வருகிறாராம்.

அந்த வாய்ப்பை எல்லாம் தவற விட்டுவிட்டு இப்போது நல்ல கதைகளை இயக்குனர்களிடம் கேட்டு வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் பரத், வாணி போஜன் நடிப்பில் வெளியான மிரள் படம் எதிர்பார்த்த அளவு போகவில்லை. இப்போது இதே கூட்டணியில் பரத்தின் 50 வது படமாக லவ் படம் உருவாகியுள்ளது. இப்படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

Also Read : புது அவதாரம் எடுத்துள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை.. பரத்துடன் மிரள விடப் போகும் முதல் படத்தின் போஸ்டர்

Trending News