வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

வாய்ப்பில்லாமல் ஆரம்பித்த இடத்திற்கே சென்ற பரத்.. நொந்துபோய் கையில் எடுத்த டெக்னிக்

ஷங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் படத்தின் மூலம் ஒரு சிறந்த நடிகராக மக்கள் மனதில் இடம் பிடித்தவர் பரத். அதன் பிறகு விஷால், ரீமாசென் நடிப்பில் வெளியான செல்லமே படத்தில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் பரத் நடித்த காதல் படம் இன்றளவும் பல ரசிகர்களின் பேவரைட் படமாக உள்ளது.

மேலும் தன்னுடைய நடனம் மற்றும் நடிப்பின் மூலம் தனக்கான தனி இடத்தை பிடித்தார். எம் மகன், கண்டேன் காதலை, வெயில் ஆகிய படங்களில் சிறந்த நடிப்பின் மூலம் நடிகன் என்ற ஒரு அந்தஸ்தை பெற்றார். ஆனால் அதன்பிறகு பரத் நடித்த படங்கள் ரசிகர்களின் கவனம் பெறவில்லை.

உதாரணமாக 555, கடுகு, ஸ்பைடர், காளிதாஸ் போன்ற படங்கள் அவருக்கு சறுக்கலாக அமைந்து. காதல் படங்களின் கலக்கி வந்த பரத்துக்கு ஆக்ஷன் படங்கள் கை கொடுக்கவில்லை என்ற பேச்சு அடிபட்டு வந்தது. இதனால் மீண்டும் காதல் கதைகள் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார் பரத்.

தற்போது லவ் என்ற படத்தில் ஒப்பந்தமாகி பரத் நடித்து வருகிறார். இது பரத்தின் 50வது படமாகும். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். இப்படத்தின் பரத்துக்கு ஜோடியாக ப்ரியா பவானி சங்கர் நடிக்கிறார்.

லவ் படத்தை ஆர் பி பாலா இயக்குகிறார். மேலும் ஆர் பி பிலிம்ஸ் இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்கிறது. லவ் படத்தில் ராதாரவி, விவேக் பிரசன்னா, டேனியல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு ரோனி ரஃபேல் இசையமைக்கிறார்.

இந்நிலையில் பரத் பழையபடி ஆரம்பித்த இடத்திற்கே சென்று நிலையான இடத்தை பிடிக்க போராடி வருகிறார். லவ் படம் பரத்தின் திரை வாழ்க்கையை மாற்றி அமைக்கிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். மேலும் இப்படத்தின் மீது முழு நம்பிக்கை வைத்திருக்கிறார் பரத்.

Trending News