‘காதல் ‘ திரைப்படம் மூலம் நாயகனான பரத்துக்கு, ‘எம் மகன்’ திரைப்படத்திற்கு பிறகு பெரிதாக சொல்லிக்கொள்ளும் அளவிற்கு எந்த ஹிட் படங்களும் அமையவில்லை. 2009 ஆம் ஆண்டு வெளியான ‘கண்டேன் காதலை’ படம் ஓரளவிற்கு வெற்றிக் கண்டது. சொல்ல போனால் பரத்திற்கு கடந்த 10 ஆண்டுகளாக எந்த படங்களும் சரியாக அமையவில்லை.
பொதுவாக நடிகர், நடிகைகளுக்கு தொடர்ந்து படங்கள் தோல்வியடைந்தால் மார்க்கெட் இழந்து விடுவார்கள், பட வாய்ப்புகளும் கிடைப்பதில்லை. ஆனால் பரத் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பிளாப் படங்கள் கொடுத்தாலும் எப்போதும் ஷூட்டிங்கில் பிஸியாகவே இருக்கிறார்.
தமிழ் படங்கள் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் திரைப்படங்களிலும் நடித்து கொண்டிருக்கிறார். முக்கியமான கதாபாத்திரம் என இல்லமால் கிடைக்கும் சின்ன சின்ன கதாபாத்திரங்களை கூட விட்டு வைக்காமல் நடிக்கிறார். தமிழில் கூட சின்ன சின்ன கதாபாத்திரங்கள், கேமியோ ரோல்கள் என வரும் வாய்ப்புகளில் நடித்து வருகிறார்.
மேலும் தொலைக்காட்சிகளிலும் நடுவராக பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இவர் தன்னை சினிமாவில் நிலைநிறுத்தி கொள்ளவே இப்படி கிடைக்கும் வாய்ப்புகளை எல்லாம் பயன்படுத்தி கொண்டிருக்கிறார்.
கடந்த வாரத்தில் கூட பரத் நடித்த ‘லாஸ்ட் சிக்ஸ் ஹார்ஸ்’ என்னும் திரைப்படம் தமிழ் மற்றும் மலையாளத்தில் வெளியாகி இருக்கிறது. யாக்கை திரி, முன்னறிவான், மிரல் என்னும் படங்களிலும் நடித்து வருகிறார். பெயரிடப்படாத 2 மலையாள திரைப்படங்களும் இவரது லிஸ்டில் காத்திருக்கிறது.
நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்று ஆணவத்தில் இருக்கும் நடிகர்களுக்கு இவர் கேரியர் ஒரு பாடமாக இருக்கும். இதேபோன்று நல்ல கதாபாத்திரத்தில் நடித்து நடிகராக தங்களை நிலைநிறுத்திக் கொள்ளலாம் என்பதுதான் நிதர்சனமான உண்மை.