புதன்கிழமை, ஜனவரி 8, 2025

நம்பிக்கை துரோகம் பண்ணது யாருடா பாரதி.. இன்னும் ஒரே வாரத்தில் கிறுக்கு பிடிக்க வைக்கும் விஜய் டிவி

விஜய் டிவியின் பாரதிகண்ணம்மா சீரியலில் பிறந்தநாள் கொண்டாடும் கண்ணம்மா, தன்னுடைய குழந்தை லஷ்மிக்கு பாரதி தான் அப்பா என்ற உண்மையை கண்ணம்மா தெரியப்படுத்த போகிறாரா இல்லையா என்ற சஸ்பென்ஸில் ரசிகர்கள் இருந்தனர்.

ஆனால் பாரதியே லஷ்மியிடம் ‘உன்னுடைய அம்மா தான் எல்லாமே. ஆகவே அவங்கதான் உனக்கு அப்பா அம்மா எல்லாம். ஆகையால் இனி நீ அப்பாவைப்பற்றி கேட்கக் கூடாது’ என புரியவைத்து விடுகிறான். இதைப் பார்த்த சீரியல் ரசிகர்கள், ‘இந்த மொக்கைக்கு இவ்வளவு பெரிய சஸ்பென்ஸ்சா’ என சோசியல் மீடியாவில் கழுவி ஊற்றினார்.

மேலும் பாரதி கண்ணம்மாவின் பிறந்தநாள் விழாவிற்கு வந்தால், கண்ணம்மா ரகசியம் ஒன்றை தெரிவிப்பதாக கூறியிருந்தாள். அதாவது பாரதியிடம் வளரும் ஹேமாவும் தன்னுடைய மகள் தான் என்று கண்ணம்மா பாரதியிடம் இவ்வளவு நாள் மறைத்து வைத்த ரகசியத்தை உடைத்துவிட்டார்.

ஆனால் பாரதி அதை துளி கூட நம்பவில்லை. ஹேமா ஒரு ஆதரவற்ற குழந்தை என்றும் இதற்கு என்னுடைய அம்மாதான் சாட்சி என்றும், தன்னுடைய அம்மா என்ன காலத்திலும் இப்படி ஒரு நம்பிக்கை துரோகத்தை செய்ய மாட்டார் என்றும் அடித்துக் கூறுகிறான்.

சௌந்தர்யாவின் மீது இவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கும் பாரதியிடம், கண்ணம்மா ஆதாரத்துடன் ஹேமா தன்னுடைய மகள் என்பதை நிரூபித்தால் அம்மா-மகன் உறவு கெட்டுவிடும் என்பதற்காக அந்த இடத்தில் கண்ணம்மா அமைதியாக இருந்து விடுகிறாள்.

இவ்வாறு சீரியலை லாஜிக்கே இல்லாமல் கொண்டுசெல்லும் பாரதிகண்ணம்மா சீரியல் இயக்குனரை விஜய் டிவி ரசிகர்கள் திட்டி தீர்க்கின்றனர். அத்துடன் இதைப் பார்ப்பவர்களையும் கூடிய சீக்கிரம் கிறுக்கு பிடிக்க வைத்து விடுவார்கள் என்றும் கமெண்ட் அடிக்கின்றனர்.

Trending News