வெள்ளிக்கிழமை, ஜனவரி 3, 2025

ஒரு வழியா கண்ணம்மா பிறந்தநாளுக்கு வந்த பாரதி.. சஸ்பென்ஸ் என்கிற பெயரில் சாகடிக்கிறீங்க!

விஜய் டிவியின் பாரதிகண்ணம்மா சீரியல் பாரதி, கண்ணம்மா பிறந்தநாளுக்கு வருவாரா மாட்டாரா என்ற எதிர்பார்ப்பில் கடந்த ஒரு வாரமாகவே ரசிகர்கள் குழம்பித் தவித்தனர். இன்னிலையில் தற்போது வெளியாகியிருக்கும் ப்ரோமோவில் பாரதி, கண்ணம்மாவின் பிறந்தநாள் கொண்டாட்ட விழாவிற்கு வருகை தந்திருக்கிறார்.

கேக் வெட்ட அனைவரும் கூடி இருக்கும்போது, லட்சுமி தன்னுடைய அம்மாவிடம் யார் அப்பா என்று இப்பயாவது சொல்லே அம்மா என கெஞ்சுகிறாள். அப்பொழுது கண்ணம்மா, பாரதி தன் வாயாலே அதை ஒத்துக் கொள்ள மாட்டாரா என ஏக்கத்துடன் பாரதியை பார்க்கிறாள்.

சிறிது நிமிடம் அனைவரும் அமைதியாக இருக்கின்றனர். பிறகு பாரதி, ‘உன்னுடைய அம்மா தான் உனக்கு இனி எல்லாமே. உனக்காக உன்னுடைய அம்மா எவ்வளவு தியாகம் செய்திருக்கிறார். அப்படி இருக்கும்போது நீ ஏன் உன்னுடைய அப்பாவை பார்த்த நினைக்கிறாள்’ என லஷ்மிடம் மனம் நோகக்கூடாது என்பதற்காக கூறுகிறான்.

அதன்பிறகு லஷ்மி தன்னுடைய அம்மாவான கண்ணம்மாவை இருக்க கட்டிப்பிடித்துக்கொண்டு அழுகிறாள். இவ்வாறு பாரதி லஷ்மியின் உணர்வைப் புரிந்துகொண்டு கண்ணம்மாவை பற்றி அந்த இடத்தில் தரக்குறைவாக பேசாமல் உயர்வாகப் பேசியது சீரியல் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

அத்துடன் நெட்டிசன்கள் பாரதிகண்ணம்மா சீரியலில் சஸ்பென்ஸ் என்கிற பெயரில் சாகடிக்கிறீங்க என திட்டி தீர்க்கின்றனர். அத்துடன் சிலர், ‘இந்த மொக்கைக்கு இவ்வளவு பில்டப்பா, இன்னும் எத்தனை வருடம் உண்மையை சொல்லாமல் இருக்கப் போறீங்க!’ என பாரதிகண்ணம்மா சீரியலை கழுவி ஊற்றுகின்றனர்.

Trending News