திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

ஆண்மையே இல்லை எப்படி 2 குழந்தை பெத்துக்க முடியும்.. வெண்பா கேட்ட கேள்வியால் அதிர்ந்து போன பாரதி

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா தொடர் தற்போது விறுவிறுப்பான கதைக்களத்துடன் சென்று கொண்டிருக்கிறது. தற்போது டிஎன்ஏ டெஸ்டில் பாரதிக்கு தனக்குப் பிறந்த குழந்தைகள் தான் ஹேமா மற்றும் லக்ஷ்மி என்று தெரியவந்துள்ளது. இந்நிலையில் ஹேமா தற்கொலைக்கு முயற்சிக்கும்போது பாரதி நான் தான் உன்னுடைய அப்பா என்று கூறுகிறார்.

பின்பு எல்லோர் முன்னிலையிலும் பாரதி தற்போது டிஎன்ஏ டெஸ்ட் எடுத்ததாகவும் அதில் ஹேமா, லட்சுமி தன்னுடைய குழந்தை தான் என்று கூறுகிறார். இதைக் கேட்டு எல்லோருமே சந்தோஷமடைகின்றனர். ஆனால் நடுவில் புகுந்த வெண்பா இரண்டு முறை டிஎன்ஏ டெஸ்ட் எடுத்திருக்கிறோம்.

Also Read : டிஆர்பி-யில் சன் டிவி-யை சுக்கா போட்ட விஜய் டிவி.. பாக்யா, கண்ணம்மாவிற்கு இவ்வளவு மவுசா

உனக்கு தான் ஆண்மையே இல்லையே எப்படி இரண்டு குழந்தையை பெற்றெடுக்க முடியும் என வெண்பா கேட்கிறார். மேலும் நீ டிஎன்ஏ எடுக்க போன விஷயம் யாருக்குத் தெரியும் என்று கேட்கிறார். அகிலனுக்கு தெரியும் என பாரதி சொன்னவுடன் இது ஒன்றே போதுமே என வெண்பா ஆட்டத்தை தொடங்கி வைக்கிறார்.

அகிலன் தான் இந்த ரிப்போர்ட்டை மாற்றி வைத்திருப்பார் என அடித்து வெண்பா சொல்கிறார். உடனே கண்ணமாவும் அதான் வெண்பாவே சொல்லிட்டாளே அப்புறம் எப்படி உங்களுக்கு குழந்தை பிறந்திருக்கும் என்று கேட்கிறார். அப்போது என்ன செய்வதென்று தெரியாமல் பாரதி முழிக்கிறார்.

Also Read : பிக் பாஸில் இந்த வாரம் வெளியேற போகும் 2 போட்டியாளர்கள்.. ஆண்டவரால் ஆடிப்போன ஹவுஸ் மேட்ஸ்

அப்போது வெண்பாவின் எதிரியான செல்வராஜ் மற்றும் துர்கா அங்கு வந்து எல்லா உண்மையும் சொல்கிறார்கள். அப்போது தான் வெண்பாவின் முகத்திரை கிழிகிறது. மேலும் பாரதி தன்னை மன்னித்து விடும்படி கண்ணம்மாவிடம் கெஞ்சி கேட்கிறார்.

கண்ணமாவே பாரதியை மன்னிக்க தயாரான போதும் ஹேமா மற்றும் லட்சுமி இருவரும் தனது அம்மாவை தவறாக நினைத்து களங்கம் சுமத்தியதால் பாரதியை ஏற்க மறுக்கிறார்கள். இதனால் பாரதி மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகிறார். இவ்வாறு பல திருப்பங்களுடன் பாரதி கண்ணம்மா தொடர் ஒளிபரப்பாக இருக்கிறது.

Also Read : பிக் பாஸில் காசு கொடுத்து ஓட்டு வாங்கும் 3 போட்டியாளர்கள்.. கேமரா இருப்பது தெரியாமலே உளறிய கேவலம்

Trending News