புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

உருட்டுறதுக்கு கதை இல்லாமல் முட்டாளாக்கும் பாரதி கண்ணம்மா.. இதுக்கு மேல கேவலமா ஒரு சீரியல் எடுக்க முடியாது

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா தொடர் இன்னும் சில தினங்களில் முடிவுக்கு வர உள்ளது. ஆரம்பத்தில் இந்த தொடர் எவ்வளவு சுவாரஸ்யமாக சென்று கொண்டிருந்ததோ அதற்கு நேர் எதிராக தற்போது ஆமைக்கு டஃப் கொடுக்கும் அளவிற்கு ஊர்ந்து வருகிறது.

பாரதி ஏற்கனவே இரண்டு முறை டிஎன்ஏ டெஸ்ட் எடுத்துள்ளார். ஆனால் வெண்பாவின் சூழ்ச்சியால் அந்த இரண்டு முறையுமே டெஸ்ட் ரிசல்ட் தப்பாக வந்தது. இப்போது மீண்டும் டிஎன்ஏ டெஸ்ட் கொடுத்து ரிசல்ட்காக பாரதி காத்திருக்கிறார். இப்போதுள்ள டெக்னாலஜிக்கு உடனே ரிசல்ட் பார்த்து விடலாம்.

Also Read : மிச்சர் மட்டும் சாப்பிட்டதற்கு இவ்வளவு சம்பளமா?. 42 நாட்களில் நிவாவுக்கு வாரி வழங்கிய பிக் பாஸ்

ஆனால் உருட்டுறதுக்கு கதை இல்லாமல் ரசிகர்களை முட்டாளாக்க பாரதி கண்ணம்மா இயக்குனர் கதையை இழுத்து வருகிறார். அதாவது பாரதி ரிசல்ட்டை வாங்குவதற்காக டெல்லிக்கு செல்ல உள்ளார். மேலும் தனது அப்பா யார் என்று கண்டுபிடிக்க ஹேமா முயற்சி செய்கிறார்.

அப்போது தனியாக ரோட்டில் நடந்து வரும் ஹேமாவை வெண்பா எதர்ச்சியாக சந்திக்கிறார். அப்போது ஹேமா என் அப்பாவை கண்டுபிடிக்க போறேன் என்று வெண்பாவிடம் சொல்கிறார். இதற்கு நக்கலாக உங்க அம்மாவுக்கே உங்க அப்பா யாருன்னு தெரியாது என வெண்பா கிண்டல் அடிக்கிறார்.

Also Read : முதல் முறையாக சன் டிவி டிஆர்பி-யை அடித்து நொறுக்கி விஜய் டிவி.. அனல் பறக்கும் டாப் 10 சீரியல்கள்

இதைக் கேட்டு ஆத்திரமடைந்த ஹேமா கல்லை எடுத்து வெண்பாவின் மண்டையை உடைக்கிறார். இதனால் படுகாயமடைந்த வெண்பா அடியாட்களை வைத்து ஹேமாவை கடத்திவர சொல்கிறார். வீட்டில் உள்ள எல்லோரும் ஹேமாவை காணவில்லை என்ற பதட்டத்தில் தேடுகிறார்கள்.

அப்போது கண்ணம்மா ஹேமாவின் செருப்பை பார்த்து அடையாளம் கண்டு அழுகிறார். கடைசியில் பாரதிக்கு வெண்பா தான் தன் மகளை கடத்தி உள்ளார் என்ற விஷயம் தெரிந்து மொத்தமாக அவரை வெறுக்க உள்ளார். இப்படி ஒரு கேவலமான சீரியலை இதுவரைக்கும் பார்த்ததில்லை என ரசிகர்கள் பாரதி கண்ணம்மா தொடரை வெறுக்கிறார்கள்.

Also Read : பிக்பாஸ் வீட்டில் ராபர்ட் காதலுக்கு பச்சைக்கொடி காட்டிய அப்பா.. மாஸ்டரின் மறுபக்கத்தை கூறி கதறல்

Trending News