சனிக்கிழமை, டிசம்பர் 28, 2024

ஏண்டா குழந்தைகளுக்கே தெரிஞ்சிருச்சு இன்னுமாடா சாவ அடிக்கிறீங்க.. கதறவிடும் பாரதி கண்ணம்மா

விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் தொடர் பாரதிகண்ணம்மா. இதில் பாரதி ஒரு டிஎன்ஏ டெஸ்ட் எடுத்தால் மொத்த கதையும் முடிந்துவிடும். அதை மட்டும் செய்ய விடாத இயக்குனர் கதையை ஜவ்வு போல இழுத்து வருகிறார். இதனால் இத்தொடருக்கு எப்போ எண்டு கார்டு போடுவீர்கள் என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஆரம்பத்தில் லட்சுமிக்கு பாரதி தான் அப்பா என்ற உண்மை தெரிய வந்துள்ளது. ஆனால் ஹேமா தன்னுடைய அம்மா யார் என்ற பாரதியிடம் நச்சரித்தால் தன்னுடைய முன்னாள் காதலியின் புகைப்படத்தை காட்டி இவர் தான் உன்னுடைய அம்மா என சமாதானப்படுத்தி வைத்துள்ளார்.

இந்நிலையில் வழக்கம் போல ஹேமா ஸ்கூலுக்கு சென்றுள்ளார். அப்போது லட்சுமி என்னுடைய அப்பாவும் பாரதிதான் என உண்மையை போட்டு உடைத்துள்ளார். இதனால் ஹேமா குழம்பிப் போயுள்ளார். அப்போது குழந்தைகளுக்கு மதிய உணவு கொடுப்பதற்காக கண்ணம்மா மற்றும் சௌந்தர்யா இருவரும் ஸ்கூலுக்கு வருகின்றனர்.

அங்கு சௌந்தர்யாவிடம் ஹேமா, லட்சுமி சொன்னதை கூறுகிறாள். இதனால் அதிர்ச்சியில் சௌந்தர்யா மற்றும் கண்ணம்மா இருவரும் உறைக்கிறார்கள். இதை தொடர்ந்த பாரதி தான் லட்சுமிக்கும் அப்பா என்ற உண்மையை சௌந்தர்யா போட்டு உடைக்கிறார். உன்னுடைய அம்மான்னு பாரதி ஒரு ஃபோட்டோ காண்பித் தானே அது உன்னுடைய அம்மாவே இல்லை.

இத்தனை நாளா சமையல் அம்மா, சமையல் அம்மான்னு கூப்பிட்ட கண்ணம்மா தான் உன்னுடைய அம்மா என ஹேமாவிடம் சௌந்தர்யா கூறுகிறார். தற்போது இரண்டு குழந்தைகளுக்குமே தன் அம்மா, அப்பா யார் என்பதும் தெரியவந்துள்ளது. இதனால் ஹேமா அடுத்ததாக என்ன முடிவு எடுக்க உள்ளார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

ஆனால் இந்தக் குழந்தைகளுக்கு உண்மை தெரிந்தும் இன்னும் கதையை இழுத்து சாவ அடிக்கிறீங்க என இயக்குனரை கண்டபடி திட்டி கமெண்டுகளை ரசிகர்கள் போட்டு வருகின்றனர். ஆனால் அப்போதும் பாரதிகண்ணம்மா தொடரை முடிக்கும் எண்ணம் இப்போதைக்கு இயக்குனருக்கு இல்லை என்பது போல் தான் தெரிகிறது.

Trending News