ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

அந்த விறுவிறுப்பான படத்தை அட்டை காப்பி அடித்த பாரதிகண்ணம்மா.. ரொம்ப ஓவரா போறீங்க

விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் தொடர் பாரதி கண்ணம்மா. இத்தொடரில் தற்போது ஆயிஷா என்ற குழந்தை இறந்துள்ளதால் அவருடைய இதயத்தை சக்தி என்ற குழந்தைக்கு மாற்று அறுவை சிகிச்சை நடக்க உள்ளது. இதனால் மிகுந்த எதிர்பார்ப்புடன் இத்தொடர் நகர்ந்து வருகிறது.

இதில் விக்கிரபாண்டி என்ற ஊரில் ஆயிஷாவுக்கு அறுவை சிகிச்சை செய்து அவருடைய இதயத்தை எடுத்து சென்னைக்கு செல்ல கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் தேவைப்படுகிறது. இந்த நேரத்திற்குள் பல போராட்டங்களை கடந்து சென்னை சென்று பாரதி சக்திக்கு அறுவை சிகிச்சை செய்ய உள்ளார்.

இது மிக சீரியஸான சென்டிமென்ட் காட்சி என்றாலும் இந்த ப்ரோமோவை பார்த்து ரசிகர்கள் வயிறு குலுங்க சிரித்து வருகின்றனர். இதற்கு காரணம் சரத்குமார், சேரன், பிரசன்னா, ராதிகா, பிரகாஷ் ராஜ் என பல சினிமா பிரபலங்கள் நடித்து வெளியான சென்னையில் ஒரு நாள் படத்தில் இடம்பெற்ற காட்சியை அப்படியே பாரதிகண்ணம்மா இயக்குனர் அட்டை காப்பி அடித்துள்ளார்.

ஆனால் அதில் சில மாற்றங்கள் செய்துயுள்ளார். அதாவது இத்தொடரில் இதயத்தை ப்ளைட்டில் எடுத்துச் செல்ல உள்ளனர். ஆனால் இதிலும் ஒரு சிக்கல் உள்ளது. அதாவது அந்த நேரத்தில் புயல் காற்று வரும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. இவற்றை கடந்து எப்படி அறுவை சிகிச்சை நடக்கப் போகிறது என்ற சுவாரஸ்யத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதற்காக முதல் நாளே கண்ணம்மா விக்ரமபாண்டி என்ற ஊருக்குள் செய்து சென்றுள்ளார். இதனால் லட்சுமியை பாரதி வீட்டில் விட்டு விட்டு சென்றுள்ளார். இந்நிலையில் ஆயிஷாவுக்கு அறுவை சிகிச்சை செய்ய உள்ள மருத்துவருக்கு பயம் இருப்பதால் பாரதியை இந்த சிகிச்சைக்காக அழைத்து உள்ளார்.

பாரதியும் தற்போது விக்ரமபாண்டிக்கு சென்றுள்ளார். இந்நிலையில் பாரதி ஆயிஷாவுக்கு சிகிச்சை செய்து இதயத்தை எடுத்துக் கொண்டு சென்னை சென்று சக்திக்கு இதயத்தை பொருத்த உள்ளார். இந்த இரண்டு சிகிச்சையையும் பாரதி தான் செய்யுள்ளார். இதற்கிடையே பல போராட்டங்களை கடந்து பாரதியும், கண்ணம்மாவும் இதை எப்படி முடிக்கிறார்கள் என்பதை இந்த வார பாரதிகண்ணம்மா தொடரில் வர இருக்கிறது.

Trending News