புதன்கிழமை, பிப்ரவரி 12, 2025

மண்டியிட்ட பாரதி.. வெளுத்து வாங்கும் கண்ணம்மாவின் மகள்

விஜய் டிவியில் ப்ரைன் டைம் சீரியலான பாரதிகண்ணம்மா சீரியலில் 10 வருடங்களாக மனைவி மற்றும் குழந்தைகளை ஒதுக்கி வைத்திருக்கும் பாரதி தற்போது டிஎன்ஏ டெஸ்ட் எடுக்கும் முடிவுக்கு வந்திருக்கிறார்.

அதற்கு முன்பே தன்னிடம் வளரும் கண்ணம்மாவின் ஒரு மகளான ஹேமாவிடம் அவர் கல்லூரியில் காதலித்த காதலியின் புகைப்படத்தை காண்பித்து இதுதான் உன்னுடைய அம்மா என்று பொய் சொல்லி வைத்திருக்கிறார்.

Also Read: அம்பலமான அர்னவின் லீலைகள்.. புட்டு புட்டு வைத்த முன்னாள் மனைவி

அதையும் நம்பி ஹேமா தன்னுடைய அம்மாவிடம் பேசுவதுபோல் அந்த புகைப்படத்தில் பேசிக்கொண்டிருப்பார். ஒரு கட்டத்தில் ஹேமாவிற்கு அதில் இருப்பது தன்னுடைய அம்மா இல்லை என்ற விஷயம் தெரியவருகிறது.

இதனால் புகைப்படத்தில் இருக்கும் பாரதியின் காதலியின் அம்மாவை பார்த்து விடும் ஹேமா, அவரை தன்னுடைய அப்பா முன்பு நிறுத்துகிறார். அந்த சமயம் பாரதி இவ்வளவு நாள் சொன்னதெல்லாம் பொய் என்பது சாட்சியுடன் நிறுவனமானது.

Also Read: கமலுடன் போட்டி போடும் ஜி பி முத்து.. டாப் ஹீரோயின்களுக்கு போடும் ஸ்கெட்ச்

பிறகு தன்னுடைய மகளை சமாதானப்படுத்துவதற்காக அவர் முன்பு மண்டியிட்டு பாரதி மன்னிப்பும் கேட்கிறார். இன்னும் ஒரு சில நாட்கள் மட்டும் கால அவகாசம் கொடுக்கும்படியும் அதன்பிறகு ஹேமாவின் உண்மையான அம்மா யார் எனச் சொல்கிறீர்கள் என்று அவருக்கு பாரதி வாக்கு கொடுக்கிறார்.

உடனே ஹேமாவும் இன்னும் சில நாட்களில் தன்னுடைய அம்மா யார் என்ற விஷயம் தெரிந்து விடும் என்பதனால் சந்தோசத்தில் திளைக்கிறார். மேலும் பாரதியும் டிஎன்ஏ டெஸ்ட் ரிப்போர்ட் வந்த பிறகு ஹேமா, லட்சுமி தனக்கு பிறந்த குழந்தைகள் தான் என்ற உண்மையை தெரிந்து கொள்ளப் போகிறார்.

Also Read: தரமான போட்டியாளரை இறக்கிய விஜய் டிவி.. பிக்பாஸிலும் துவங்கிய சக்களத்திச் சண்டை

அப்போது கண்ணம்மாவை இவ்வளவு வருடங்களாக சந்தேகப்பட்ட தற்காக மிகவும் வருத்தம் அடைவார். இதனால் கிளைமாக்ஸில் இருக்கும் பாரதிகண்ணம்மா சீரியல் சீக்கிரம் முடிய போகிறது. இந்த சீரியலின் 2ம் பாகமும் விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Trending News