Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

அப்பாவுக்கு 2-வது திருமணம் செய்து வைக்க நினைக்கும் மகள்.. அதிரடி திருப்பத்தில் பாரதிகண்ணம்மா சீரியல்!

விஜய் டிவியின் பாரதிகண்ணம்மா சீரியலில் பிரிந்து வாழும் மகன் மற்றும் மருமகளை சேர்த்து வைத்த மாமியார் சௌந்தர்யா ஒன்பது வருடங்களாக முயற்சி செய்து கொண்டிருக்கிறாள். இந்நிலையில் பாரதியிடம் வளரும் ஹேமாவிடம் வெண்பா, பாரதிக்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்கவேண்டும் […]

விஜய் டிவியின் பாரதிகண்ணம்மா சீரியலில் பிரிந்து வாழும் மகன் மற்றும் மருமகளை சேர்த்து வைத்த மாமியார் சௌந்தர்யா ஒன்பது வருடங்களாக முயற்சி செய்து கொண்டிருக்கிறாள். இந்நிலையில் பாரதியிடம் வளரும் ஹேமாவிடம் வெண்பா, பாரதிக்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்கவேண்டும் என்ற ஆசையை விதைத்துவிட்டாள்.

இதனால் ஹேமாவும் வெண்பாவை பாரதிக்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்க எடுத்த முடிவு தவறானது என்பதை ஹேமா உணர்ந்ததை தொடர்ந்து அடுத்த தேர்வாக கண்ணம்மாவை தேர்வு செய்கிறாள். ஹேமா கண்ணம்மாவை பாரதிக்கு திருமணம் செய்து வைக்க முடிவெடுப்பதற்கு சௌந்தர்யா போட்ட நாடகமே காரணமாக அமைந்தது.

இதனால் ஹேமாவும் பள்ளியில் தன்னுடைய தோழியாக பழகிக் கொண்டிருக்கும் லஷ்மியிடம் இதைப் பற்றிக் கூறுகிறாள். உடனே லஷ்மி இதற்கு துளிகூட சம்பந்தம் தெரிவிக்காமல், என்னுடைய அப்பா உயிரோடு இருக்கிறார். கூடிய விரைவில் எங்களைத் தேடி வருவார்.

அப்படி இருக்கும் பொழுது உன்னுடைய அப்பா எப்படி என்னுடைய அம்மாவை திருமணம் செய்து கொள்ள முடியும். இது மிகவும் மோசமான எண்ணம் என ஹேமாவை லஷ்மி சரமாரியாக விளாசினாள். அதுமட்டுமின்றி இனிமேல் என்னுடைய அம்மாவைப் பார்க்க முயற்சி செய்யக்கூடாது என்றும் இந்த விஷயம் மட்டும் என்னுடைய அம்மாவுக்கு தெரிந்தால் எவ்வளவு கஷ்டப் படுவார்கள் என லஷ்மி ஹேமாவிடம் கடுமையாக பேசுகிறாள்.

இதன்பிறகு அழுதுகொண்டே ஹேமா தன்னுடைய எண்ணம் தவறானது என்பதைப் புரிந்து கொள்கிறாள். அத்துடன் கோபப்பட்டு சென்ற லஷ்மியை எப்படி சமாளிக்கிறது என ஹேமா சிந்தித்துக் கொண்டிருக்கிறாள்.

இவ்வாறு பாரதிகண்ணம்மா சீரியலில் அம்மா அப்பாவிற்கே இரண்டாவது திருமணம் செய்து வைக்க நினைக்கும் மகள்களை பார்க்கும் சீரியல் ரசிகர்கள் கலக்கமடைந்துள்ளனர். இருப்பினும் பாரதிகண்ணம்மா சீரியலை ஜவ்வாக இழுத்துக் கொண்டிருக்கும் சீரியலின் இயக்குனரை சின்னத்திரை ரசிகர்கள் கண்டபடி கழுவி ஊற்றுகின்றனர்.

A

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.