திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

பாரதிராஜா சிவாஜியை வைத்து செதுக்கிய 3 படங்கள்.. கண்ணீர் விட்டுக் கதறிய தாய்மார்கள்

இயக்குனர் இமயம் பாரதிராஜா, கோலிவுட்டில் ஸ்டுடியோவுக்குள் நடந்து கொண்டிருந்த படப்பிடிப்புகளை வெளிப்புற படப்பிடிப்புகளாக மாற்றியவர். கிராமத்து கதைகளை உணர்வுபூர்வமாக காட்டியவர். கிராமத்து கதைகள் இப்படி தான் இருக்கும் என்ற ஸ்டிரியோடைப்பை உடைத்தவர்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 80 களின் கடைசியில் அப்பாவாக, அண்ணனாக நடித்துக் கொண்டிருந்த போது அவரை வைத்து அழகிய காதல் கவிதையை படைத்தவர். பாரதிராஜாவும், சிவாஜியும் மூன்று முறை ஒன்றாக இணைந்து பணியாற்றி இருக்கின்றனர். இந்த மூன்று படங்களுமே தரமான படங்கள் தான்.

Also Read: சத்யராஜும், சிவாஜியும் சேர்ந்து ஹிட் கொடுத்த 5 படங்கள்.. வெள்ளிவிழா பார்த்த முதல் மரியாதை

முதல் மரியாதை: கமலை வைத்து சிகப்பு ரோஜா படம் எடுத்த பிறகு பாரதி ராஜா , சிவாஜியை வைத்து கொடுத்த அழகிய காதல் காவியம் தான் முதல் மரியாதை. இந்த படம் சிவாஜி, ராதா, சத்யராஜ், வடிவுக்கரசி, தீபன் என நிறைய நட்சத்திரங்கள் நடித்து 1985 ஆம் ஆண்டு வெளியானது. ஊரின் முக்கியஸ்தர்களில் ஒருவராக வரும் மலைச்சாமி (சிவாஜி) தன்னுடைய உறவினர் ஒருவரின் மகள், காதலால் ஏமாந்து குழந்தையை சுமந்து கொண்டிருக்கும் பொன்னாத்தாளை (வடிவுக்கரசி) திருமணம் செய்கிறார்.

விதியே என்று வாழ்ந்து கொண்டிருக்கும் மலைசாமிக்கு, அந்த ஊருக்கு புதிதாக வரும் தன்னை விட வயதில் மிகக்குறைவான குயிலிடம் (ராதா) காதல் வருகிறது. அதன் பின்னர் அவர்கள் வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்பதே கதை. இந்த படத்தில் , இளையராஜா இசையில் ‘பூங்காத்து திரும்புமா’, ‘வெட்டிவேர் வாசம்’, ‘ராசாவே உன்ன நம்பி’ பாடல்களை கேட்டு இன்றளவும் சிலாகிக்காதவர்கள் யாருமில்லை.

Also Read: சிவாஜியை பார்த்து பயந்து நடுங்கிய நடிகர்.. 11 முறை பாத்ரூம் போன சம்பவம்

பசும்பொன்: பாரதிராஜா இயக்கத்தில் 1995ஆம் ஆண்டு ரிலீசான படம் பசும்பொன். இந்த படத்திற்கு கதை, திரைக்கதை எழுதியவர் சீமான். துரைராசு தேவர் (சிவாஜி), தன்னுடைய மகள் நாச்சியாருக்கு (ராதிகா) ஒரு நல்ல இடத்தில திருமணம் செய்து வைக்கிறார். ஆனால் நாச்சியாரின் கணவர் முதல் குழந்தை தங்கபாண்டி (பிரபு) பிறந்த கொஞ்ச நாளிலேயே இறந்து விடுகிறார்.

பின்னர் துரைராசு தேவர், நாச்சியாருக்கு கதிரேசன் தேவரை (சிவகுமார்) மறுமணம் செய்து வைக்கிறார். அப்போது நாச்சியார்-கதிரேசனாவுக்கு பிறக்கும் குழந்தை பின்னர் அவர்கள் வாழ்க்கையில் நடக்கும் சில விஷயங்கள் தங்கப்பாண்டியை தன்னுடைய தாயையும், மாற்றாந் தந்தையையும் வெறுக்க வைக்கிறது. இதை சுற்றி நடக்கும் கதைதான் பசும்பொன்.

தாவணிக்கனவுகள்: இந்த படம் பாரதிராஜா இயக்கிய படம் இல்லை என்றாலும், இந்த படத்தில் பாரதி ராஜாவுக்கு ஒரு முக்கிய பங்கு உண்டு. 1984 ஆம் ஆண்டு பாரதிராஜாவின் உதவி இயக்குனரான பாக்யராஜ் இயக்கி, நடித்த படம் தாவணிக்கனவுகள் . பாக்யராஜ், சிவாஜி, ராதிகா, பார்த்திபன், பாரதிராஜா, பூர்ணிமா ராவ் நடித்திருந்தனர். ஒரு லோ கிளாஸ் குடும்பத்தை சேர்ந்த இளைஞன் ஒருவன் அப்பா அம்மா இல்லாத நிலையில் தன் தங்கைகளுக்கு எப்படி நல்ல வாழ்க்கையை அமைத்து கொடுக்கிறான் என்பதே கதை. இதில் சிவாஜி ஏற்று நடித்த கேப்டன் சந்திர போஸ் யாராலும் மறக்க முடியாது.

Also Read: பொதுவெளியில் அநாகரியமாய் போட்ட சண்டை.. 17 வருடமாக பாரதிராஜாவுடன் இணையாத டாப் நடிகர்

Trending News