இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் குமார் நேற்றைய தினம் மாரடைப்பு காரணமாக இறந்தார். 48 வயதிலேயே அவர் இந்த உலகத்தை விட்டு பிரிந்தது மொத்த திரையுலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இவர் பிறந்த பின்னரே பாரதிராஜா நன்கு வளர்ச்சி அடைந்திருக்கிறார். அதுவரை கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தவருக்கு அதிர்ஷ்டம் கிடைத்தது.
1970களில் பால்பாண்டியாக, சினிமா ஆர்வத்தில் கன்னட இயக்குநர் புட்டண்ணாவிடம் பணியாளராக இருந்தவர் பாரதிராஜா. அதுவரை போராடிகொண்டிருந்த பால்பாண்டி, பாரதிராஜா தன்னுடைய முதல் திரைப்படமான 16 வயதினிலேயே படம் புகழின் உச்சத்தை கொடுத்தது.
மனோஜ் குமார் தன்னுடைய முதல் மகன் பிறந்த பின்னரே அதிர்ஷ்டம் அவருடன் கைகோர்த்துக் கொண்டது அதன் பின் ‘மனோஜ் கிரியேஷன்ஸ்” என தன் சொந்த கம்பெனியினை பாரதிராஜா தொடங்கி “முதல் மரியாதை” என்ற வெற்றிகரமான படத்தை தயாரித்தார் அந்தப் படத்தில் பெயரிடும் போது தன்னுடைய மகன் மனோஜையும் திரையில் காண்பித்தார்.
பின்னர் அவரை தாஜ்மஹால் படத்தில் ஹீரோவாக அறிமுகபடுத்தினார் பாரதிராஜா, இன்னும் பல படங்களில் அவர் நடித்தாலும் ஒரு முன்னணி நடிகராக அவர் பிரகாசிக்கவில்லை. முரளியுடன் சேர்ந்து நடித்த கடல் பூக்கள், சமுத்திரம் போன்ற படங்கள் அவருக்கு அடையாளம் கொடுத்தது.
இன்று அவருக்கு பொக்கிஷமாய் இருந்த அவருடைய மகன் அவரை விட்டு பிரிந்ததை அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. பாரதிராஜா கண்ணீர் விட்டு கதறிய காட்சிகள் அனைவரையும் கரைய செய்தது. அவரது அதிர்ஷ்ட புத்திரன் அவரிடம் இப்பொழுது இல்லை என்பது பேரதிர்ச்சியாக இருக்கிறது.