இயக்குனர் பாரதிராஜா தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு முன்னோக்கி கொண்டு சென்றதில் முக்கியமான இயக்குனர். இவருடைய இயக்கத்தில் வெளியான 16 வயதினிலே, முதல் மரியாதை போன்ற படங்கள் இன்று வரை தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. பொதுவாக ஒரு படத்தின் எல்லா காட்சிகளும் ஸ்டுடியோவில் எடுத்துக் கொண்டிருந்த காலத்தில், அவுட்டோர் ஷூட்டிங் அதிகமாக புழக்கத்தில் கொண்டு வந்த இயக்குனர் பாரதிராஜா தான்.
இயக்கத்தில் இருந்து படிப்படியாக பாரதிராஜா ஒரு நடிகராகவும் மாறினார். வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார். ஆயுத எழுத்து திரைப்படத்தின் இவருடைய நெகட்டிவ் ரோல் கவனிக்கத்தக்கதாக இருந்தது. அதன் பின்னர் பாரதிராஜாவுக்கு மிகப்பெரிய பெயர் வாங்கி கொடுத்த படம் என்றால் திருச்சிற்றம்பலம்.
Also Read: குடும்பத்தோடு அவமானப்பட்ட தனுஷ்.. ராஜதந்திரத்துடன் பழிக்கு பழி வாங்கிய அசுரன்
இந்த படத்தில் தனுஷ் மற்றும் பாரதிராஜாவின் காம்போவில் வரும் காட்சிகள் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. நடிகர் தனுஷும் பாரதிராஜாவுக்கு மனதிற்கு நெருக்கமானவர் ஆனார். இதை பல மேடைகளில் பாரதிராஜா மனம் விட்டு பேசியும் இருக்கிறார். திருச்சிற்றம்பலம் திரைப்படத்திற்கு பிறகு தனுஷ் நடித்து வெற்றி பெற்ற வாத்தி திரைப்படத்தில் கூட பாரதிராஜா ஒரு காட்சியின் மட்டும் நடித்துவிட்டு போவார்.
பொதுவாக ஒருவரை நமக்கு ரொம்பவும் பிடித்து விட்டால் அவர்களைப் பற்றி புகழ்ந்து பேசுவது என்பது இயல்பான ஒன்றுதான். ஆனால் தான் யார் என்பதே மறந்து பேசும் அளவுக்கு பாரதிராஜா மாறி இருப்பது தான் தற்போது ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஆச்சரியத்தை கொடுத்திருக்கிறது. அதாவது தனுஷ் நடிப்பில் மட்டுமல்லாமல் படம் சம்பந்தப்பட்ட அத்தனை விஷயங்களிலும் தேர்ந்தவராக இருக்கிறார் என்று சமீபத்தில் சொல்லி இருக்கிறார் பாரதிராஜா.
Also Read:ஊருக்கு தான் நா உத்தமன்.. நண்பனின் குடும்பத்தை நடுரோட்டிற்கு கொண்டு வந்த தனுஷ்
அது போதாது என்று தனுஷ் நடிக்கும் படங்களில் தனுஷே எல்லா வேலையும் பார்த்துக் கொள்கிறார், அவர் படத்தின் இயக்குனர்கள் சும்மா பெயருக்குத்தான் என்று சொல்லி இருக்கிறார். இது அந்த இயக்குனர்களை மட்டம் தட்டும் விதமாக இருப்பதோடு ஒரு படத்தின் வெற்றி என்பது முழுக்க தனுஷை சுற்றி மட்டுமே இருக்கிறது என்பது போல் இவர் பேசியிருக்கிறார். மேலும் தானே தனுஷிடம் நிறைய கற்றுக் கொண்டதாகவும் பாரதிராஜா சொல்லி இருக்கிறார்.
இந்திய சினிமா அளவிலேயே மிக முக்கியமான இயக்குனர் பாரதிராஜா. இவர் இப்படி பேசி இருப்பது கொஞ்சம் ஓவராகவே இருக்கிறது. தன்னைப் போன்ற சக இயக்குனர்களை அவமதித்ததோடு, பாரதிராஜாவை போல் ஒரு இயக்குனராக மாற வேண்டும் என்ற ஆசைப்பட்டு கொண்டிருக்கும் எத்தனையோ இயக்குனர்களின் மனதை சங்கடப்படுத்துவது போலவும் இருக்கிறது. ஆனால் பாரதிராஜா இப்படி தனுஷுக்கு ஓவராக பில்டப் கொடுப்பதற்கான காரணம் இன்னும் தெரியவில்லை.
Also Read: அடுத்த நேஷனல் அவார்டை தட்டி தூக்க போகும் தனுஷ்.. எதிர்பார்ப்பை எகிற விட்ட பிரபலம்