80களில் கிராமத்து மண்வாசம் மாறாத இயற்கையோடு இயற்கையாக மிகவும் எதார்த்தமான படங்களை கொடுப்பதில் கெட்டிக்காரர் இயக்குனர் இமயம் பாரதிராஜா. தமிழில் மட்டும் 42 படங்களுக்கு கதை எழுதி இயக்கியிருக்கும் இவர், தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களையும் இயக்கி உள்ளார்.
பாக்யராஜ், மணிவண்ணன், மனோபாலா, மனோஜ்குமார், சித்ரா லட்சுமணன், பொன்வண்ணன், சீமான் போன்ற அனைவரும் இயக்குனர் இமயம் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனர்களாக பணிபுரிந்து, அதன்பின் சினிமாவில் தங்களுக்கு என ஒரு பெயரை வகுத்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
16 வயதினிலே துவங்கி கிழக்கே போகும் ரயில், சிவப்பு ரோஜாக்கள், டிக் டிக் டிக் போன்ற ஏகப்பட்ட வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர் இமயம் பாரதிராஜா, சமீப காலமாக நடிப்பதில் ஆர்வம் காட்டிக்கொண்டு இருந்தார். தனுஷின் திருச்சிற்றம்பலம், வாத்தி போன்ற படங்களிலும் பாரதிராஜா நடித்திருந்தார்.
அதன் பிறகு கடைசியாக 2020 ஆம் ஆண்டு வெளியான ‘மீண்டும் ஒரு மரியாதை’ என்ற படத்தை நடித்து இயக்கியிருந்தார். அதன் பிறகு நடிப்பதில் பயங்கர பிசியாக இருந்த பாரதிராஜா, ஒரு கட்டத்தில் வயது மூப்பு காரணமாக படத்தில் நடிப்பதை குறைத்துக் கொண்டார். ஆனால் அவருக்கு தான் இறப்பதற்குள் மீண்டும் ஒரு படத்தை இயக்கி விட வேண்டும் என்ற ஆசை ரொம்ப நாட்களாக இருந்து வந்தது. இப்பொழுது அதற்கு விதை தூவி விட்டார்.
Also Read: கனவு படத்திற்கு வழி விடாத உடல்நிலை.. இதுதான் என் கடைசி படம் ஒரே போடாய் போட்ட பாரதிராஜா
கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படத்தை இயக்க உள்ள பாரதிராஜா, அந்த படத்திற்கு ‘தாய்மெய்’ என்று பெயரிட்டுள்ளார். அதில் அவரும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படம் முழுக்க முழுக்க தேனியில் நடக்கும் கதை. இந்த படமும் பாரதிராஜாவின் அடையாளமாக பார்க்கப்படும் கிராமத்து பின்னணியில் தான் உருவாகப் போகிறது.
எனவே 80 வயதில் ஆசைப்பட்ட வெகு நாள் கனவை நிறைவேற்றிக் கொள்ள துடி துடித்துக் கொண்டிருக்கும் பாரதிராஜாவின் இந்த முயற்சிக்கு திரை பிரபலங்களும் ரசிகர்களும் சோசியல் மீடியாவில் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர். மேலும் இந்த படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் படத்தைக் குறித்த முழு விவரமும் விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
Also Read: பாரதிராஜா நடிப்பிலும் ஜொலித்த 6 படங்கள்.. வில்லனாக நடித்து சூர்யாவை மிரட்டிய இயக்குனர் இமயம்