திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

வாழவைத்த வரை பற்றி பேச பணம் வாங்கிய பாரதிராஜா.. எனக்கும் வேண்டுமென அடம் பிடித்த இளையராஜா

ஒரு காலத்தில் பாரதிராஜாவின் எல்லா படங்களிலும் இசையமைப்பாளராக பணியாற்றியவர் இசைஞானி இளையராஜா. இவர்களின் காம்போவில் வெளியான படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பு இருந்தது. பாரதிராஜா பெரும்பாலும் வயல், வரப்பு ஆகியவற்றை சுற்றி தான் படங்கள் எடுப்பார்.

அதில் இளையராஜாவின் இசை கனகச்சிதமாக பொருந்தும். இவ்வாறு வெற்றி கூட்டணியாக இருந்த இவர்களிடையே ஒரு பிரிவு ஏற்பட்டது. ஒரு படத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக தற்போது வரை இவர்கள் இருவரும் பேசிக்கொள்ளாமல் உள்ளனர். இவர்கள் எப்போது இணைவார்கள் என்று எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.

Also Read : என் முதல் படத்தைப் பார்த்துட்டு பாரதிராஜா கூறிய விமர்சனம்.. பாட்ஷா பட இயக்குனர் பகிர்ந்து சுவாரஸ்யம்

இந்நிலையில் சமீபத்தில் பஞ்சு அருணாச்சலத்தின் 80வது பிறந்த நாள் விழா பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டது. தமிழ் சினிமாவில் முக்கிய பிரபலங்களாக இருக்கும் ரஜினி, கமல், இளையராஜா, பாரதிராஜா போன்ற பலருக்கு வாழ்வு தந்தவர் தான் பஞ்சு அருணாச்சலம்.

ஆகையால் அவரது விழாவில் சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் என பலர் கலந்து கொண்டனர். மேலும் இந்த விழாவில் பாரதிராஜா மற்றும் இளையராஜா ஆகியோரும் கலந்து கொண்டனர். ஆனால் பாரதிராஜாவை பார்த்த கோபத்தில் இளையராஜா பாதியிலேயே விழாவில் இருந்து சென்று விட்டாராம்.

Also Read : மேடையிலேயே பிரபல இயக்குனரை அவமதித்த இளையராஜா.. ஆணவத்தின் உச்சிக்கு சென்ற சம்பவம்

இதற்கு இவர்களுக்குள் இருக்கும் சண்டை மட்டும் காரணம் இல்லையாம். அதாவது பஞ்சு அருணாச்சலத்தின் விழாவை ஒரு தனியார் நிகழ்ச்சி நடத்தியது. இதில் கலந்து கொள்வதற்காக இயக்குனர் பாரதிராஜா ஒரு லட்சம் பணம் வாங்கிக் கொண்டாராம். இந்த விஷயத்தை இளையராஜா அந்த மேடையில் தான் தெரிந்து கொண்டுள்ளார்.

ஒரு நண்பனை பற்றி பேசவே பணம் வாங்கிக் கொண்டான் என்று பாரதிராஜா மீது கோபத்தில் இளையராஜா செல்லவில்லையாம். எனக்கு மட்டும் பணம் கொடுக்க வில்லையே என்ற கோபத்தில் சென்றுள்ளார். பஞ்சு அருணாச்சலம் இல்லை என்றால் பாரதிராஜாவும் இல்லை, இளையராஜாவும் இல்லை. அவரைப் பற்றி பேசுவதற்கே பணம் வாங்குகிறார்கள் என்பது மிகக் கேவலமாக பார்க்கப்படுகிறது.

Also Read : இளையராஜாவை மட்டுமே நம்பி 19 படத்தை இயக்கிய பிரபலம்.. பிசிறு தட்டாமல் இசைஞானி செய்த காரியம்

Trending News