48 வயதில் பாரதிராஜாவின் மகன் மனோஜ் மரணம்.. அதிர்ச்சியில் உறைந்த திரையுலகம்

manoj-bharathiraja
manoj-bharathiraja

Manoj Bharathiraja : இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் மகன் மனோஜ் திடீரென உயிரிழந்திருக்கும் செய்தி ஒட்டுமொத்த சினிமாவையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.

பாரதிராஜாவின் இயக்கிய தாஜ்மஹால் என்ற படத்தின் முலம் கதாநாயகனாக அறிமுகமானார் மனோஜ். இதை தொடர்ந்து அவர் அன்னக்கொடி, சமுத்திரம் போன்ற படங்களில் நடித்திருந்தார்.

அதோடு சிம்புவின் நடிப்பில் வெளியான ஈஸ்வரன், மாநாடு படங்களிலும் மனோஜ் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கார்த்தியின் விருமன் படத்தின் நடித்திருந்தார்.

கடைசியாக ஸ்நேக் அன்ட் லார்ட்ஸ் என்ற வெப் சீரிஸிலும் நடித்திருந்தார். தந்தை போல டைரக்ஷனில் ஆர்வம் கொண்ட மனோஜ் மணிரத்தினத்தின் பாம்பே படத்தின் அசிஸ்டன்ட் டைரக்டராக வேலை பார்த்தார்.

பாரதிராஜாவின் மகன் மனோஜ் மரணம்

மேலும் 2023 ஆம் ஆண்டு சுசீந்திரன் தயாரிப்பில் உருவான மார்கழி திங்கள் என்ற படத்தை மனோஜ் தான் இயக்கி இருந்தார். இந்நிலையில் சமீபத்தில் மனோஜ் இருதய அறுவை சிகிச்சை செய்துள்ளார்.

இந்த சூழலில் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் மனோஜ் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்திருக்கிறார். அவருக்கு தற்போது 48 வயதாகிறது.

மனோஜ் பாரதிராஜாவின் இந்த திடீர் மரணம் சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் திரை பிரபலங்கள் மனோஜின் மறைவிற்கு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

Advertisement Amazon Prime Banner