வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

குடும்பத்தையே பகடைக்காயாய் உருட்டிய பாரதி.. சீக்கிரமா சோழிய முடிச்சு விடுங்கய்யா சாமி

விஜய் டிவியின் பாரதிகண்ணம்மா சீரியலில் பெற்ற பிள்ளைகள் தனக்கு பிறக்கவில்லை என 10 வருடங்களாக பாரதி, மனைவி கண்ணம்மா மற்றும் அவருடைய இரண்டு மகள்களையும் ஒதுக்கி வைத்திருக்கிறார். இத்தனை வருடங்களாக வராத ஞானோதயம் இப்போது வந்திருக்கிறது.

தற்போது DNA டெஸ்ட் எடுக்கும் முடிவுக்கு வந்திருக்கும் பாரதி, அதற்காக தன்னுடைய குடும்பத்தை பகடைக்காய் உருட்டுகிறார். மேலும் பாரதியின் அப்பா வேணுவுக்கு வயிற்றில் புற்றுநோய் இருப்பது தெரிந்ததும் குடும்பமே அதிர்ச்சியில் உறைகிறது.

Also Read: ஓவர் ஆட்டம் போடும் வெண்பா.. சோழிய முடித்துவிட்ட கண்ணம்மாவின் மகள்

அந்த சமயம் பார்த்து குடும்பத்தில் இருக்கும் அனைவருக்கும் மாஸ்டர் ஹெல்த் செக்கப் பண்ண வேண்டும் என்று அனைவருடைய ரத்த மாதிரியையும் பாரதி எடுக்கச் சொல்கிறார். அப்போது கண்ணம்மா மற்றும் லட்சுமி இருவரையும் தன்னுடைய குடும்பம் என்று அந்த சமயத்தில் மட்டும் கூட்டு சேர்ந்து கொண்டு அவர்களிடமும் ரத்த மாதிரியை எடுக்கிறார்.

அதன்பிறகு லட்சுமி மற்றும் ஹேமா இருவரின் ரத்த மாதிரியை மட்டும் தனியே வாங்கி, வேறு ஒரு இரத்த பரிசோதனை கூடத்தில் சென்று டிஎன்ஏ டெஸ்ட் எடுக்க பார்க்கிறார். இதன் பிறகு ஹேமா, லட்சுமி இருவரும் பாரதிக்கு பிறந்த குழந்தைகள் தான் என்ற உண்மை டெஸ்ட் ரிப்போர்ட்டில் வருகிறது.

Also Read: இதுவரை பிக்பாஸ் டைட்டிலை வென்ற 5 பிரபலங்கள்.. இப்ப என்ன செய்றாங்க தெரியுமா?

இதைப் பார்த்ததும் கதிகலங்கிப் போன பாரதி, இவ்வளவு நாள் கண்ணம்மாவை சந்தேகப்பட்டது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்பதை உணர்கிறார். இப்படிப் பரபரப்பான சூழ்நிலை பாரதிகண்ணம்மா சீரியலில் ஒளிபரப்பாகிறது.

இந்த சைடு கேப்பில் வெண்பாவும் தன்னுடைய வயிற்றில் வளரும் குழந்தைக்கு பாரதிதான் என சைடு கேப்பில் கோல் அடிக்க பார்க்கிறார். இதையெல்லாம் பார்த்த பிறகு நெட்டிசன்கள் பாரதிகண்ணம்மா சீரியல் சீக்கிரம் முடிச்சு விடுங்கடா சாமி என்று கமெண்ட் செய்கின்றனர்.

Also Read: தீபாவளிக்கு ஒளிபரப்பாகும் 5 படங்கள்.. சூப்பர் ஸ்டார் படம் இல்லாத ஒரே வருத்தம் தான்

Trending News