சனிக்கிழமை, ஜனவரி 25, 2025

சந்தியா ராகம் சீரியலில் புவனேஸ்வரி போட்ட பிளானில் சிக்கிய தனம்.. ரகுராமிற்காக வாயை மூடிக்கொண்ட ஜானகி மாயா

Sandhiya Ragam Serial: ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வருகின்ற சந்தியா ராகம் சீரியலில், புவனேஸ்வரி போட்ட பிளான் படி பஞ்சாயத்து கூட்டி ரகுராம் குடும்பத்தை அவமானப்படுத்தி பேசிவிட்டால் தனம் நம் வழிக்கு வந்து விடுவார் என்று நினைத்தார். அதன்படி ஊர் பஞ்சாயத்தை கூட்டி ரகுராம் மருமகன் கதிர் தான் எங்க வீட்டு பிள்ளை கார்த்திக்கை கொலை பண்ணி இருக்கிறார். இதற்கு என்ன நியாயம் கிடைக்கும் என்று கேட்டு ரகுராமை அசிங்கப்படுத்தி பேசி விடுகிறார்.

அதற்கு ரகுராம், கதிர் என் மருமகனே கிடையாது அவன் எங்க குடும்பத்தில் சேர்ந்தவனும் இல்லை என்று உதாசீனப்படுத்தும் அளவிற்கு பஞ்சாயத்தில் பேசுகிறார். உடனே புவனேஸ்வரி அவன் கட்டின தாலி உன் மகள் கழுத்தில் இருக்கிறது. அவன் தான் என்னுடைய புருஷன் அவன் கூட தான் வாழ்வேன் என்று ஏற்கனவே பஞ்சாயத்தில் தனம் கூறி இருக்கிறாள்.

இப்படி இருக்கும் பொழுது அவன் உனக்கு மருமகன் தானே என்று ரகுராமே உசுப்பேத்தி பேசி விட்டார். உடனே ரகுராம், என் மகள் இப்பொழுது இங்கே வந்து சொல்லுவாள் கதிருக்கும் அவளுக்கும் சம்பந்தமே இல்லை என்று. அப்பொழுது உங்களுக்கு புரியும் என்று சொல்லிய நிலையில் சிவராமை விட்டு தனத்தை கூட்டிட்டு வர சொல்கிறார்.

வீட்டிற்கு வந்த சிவராமன் நடந்த எல்லா விஷயத்தையும் சொல்லிய நிலையில் ஜானகி மற்றும் மாயா, தனத்தை தனியாக கூட்டிட்டு போயி கதிர் எந்த சூழ்நிலையில் உன்னுடைய கழுத்தில் தாலி கட்டினார் என்கிற விஷயம் உனக்கு தெரிந்து விட்டது. நம்ம குடும்பத்துக்கும் உனக்காகவும் அவன் எவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கிறான் என்பதையும் புரிந்து கொள்.

அத்துடன் அவன் கார்த்திக்கு கொலை செய்யவில்லை அதை நான் கூடிய சீக்கிரத்தில் நிரூபித்து காட்டுகிறேன் என்று மாயா தனத்திடம் சொல்கிறார். மேலும் ஜானகி, பஞ்சாயத்தில் கதிர் தான் என்னுடைய புருஷன் அவன் கூட தான் நான் வாழ்வேன் என்ற விஷயத்தை சொல்லிவிடு என தனத்திடம் இரண்டு பேரும் சேர்ந்து சொல்லிவிடுகிறார்கள்.

பிறகு பஞ்சாயத்திற்கு வந்த தனம் என்ன சொல்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கும் பொழுது ரகுராம், தனத்தின் மீது நம்பிக்கையுடன் ஊர் பஞ்சாயத்து தலைவர்களிடம் பேசுகிறார். அத்துடன் தனம் சொல்ற முடிவுல தான் ரகுராம் உயிர் வாழ போகிறார் என்று தெரிந்ததால் தனம், அப்பாவின் உயிரை காப்பாற்றுவதற்காக கதிர் எனக்கு முக்கியமில்லை எங்க அப்பா என்ன சொல்கிறாரோ அதை தான் நான் கேட்பேன் என்று சொல்லிவிடுகிறார்.

உடனே இதுதான் நான் எதிர்பார்த்தேன் என்பதற்கு என்ன புவனேஸ்வரி போட்ட பிளானில் தனம் வந்து மாட்டிக் கொண்டார். அத்துடன் தனம் அப்படி சொல்லவில்லை என்றால் ரகுராம் அவருடைய உயிரை விட்டுவிடுவேன் என்று சொல்லிய காரணத்திற்காக ஜானகி மற்றும் மாயவும் ஏதும் பேச முடியாமல் வாயை மூடிக் கொண்டார்கள்.

இருந்தாலும் கதிர் மீது எந்த தவறும் இல்லை என்பதை நிரூபித்து விட்டு உன்னுடன் நான் சேர்த்து வைப்பேன் என்று தனத்துக்கு மாயா வாக்கு கொடுக்கிறார். இதே மாதிரி ரகுராமுக்கும் நடந்த விஷயம் எல்லாம் தெரிந்து விட்டால் பாதி பிரச்சனை சரியாகிவிடும். என்னதான் இருந்தாலும் கடைசியில் மாயவிடம் தோற்றுப் போய் நிற்பது புவனேஸ்வரி தான்.

Trending News