ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

இசைவாணி உங்களுக்கு பாவனி எவ்வளவோ பரவாயில்லை.. உங்க கத இவ்வளவு மோசமா இருக்கு

விஜய் டிவியில் சிறந்த பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக ரசிகர்களிடம் பிரபலமான பிக்பாஸ் நிகழ்ச்சி, இதுவரை ஐந்து சீசன்களை நிறைவு செய்திருக்கிறது. இதில் ஒரு போட்டியாளராக கலந்துகொண்ட கானா பாடகி இசைவாணி பிக்பாஸ் வீட்டில் அனைவரும் தங்களுடைய கடந்து வந்த பாதையை பகிர்ந்து கொண்டபோது இவர் மட்டும் தனக்கு திருமணம் ஆன விசயத்தைப் பற்றி எதுவுமே வாய்திறக்கவில்லை என்று இவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இதற்கு காரணம் திடீரென்று சோசியல் மீடியாவில் வைரலான இசைவாணி திருமண புகைப்படம் தான். அதன் பிறகு தொடர்ந்து இசைவாணியிடம் அவருடைய திருமணத்தைப் பற்றி கேள்வி எழுப்பிக் கொண்டே இருந்ததால் தன்னுடைய கணவர் சதீசை பற்றி வாய் திறந்தார். காதல் திருமணம் செய்து கொண்ட இசைவாணி-சதீஷ் இருவரும் திருமணத்திற்குப் பிறகு கணவர் வீட்டில் ஆதரவு கிடைக்காததால் வேறு வழி இன்றி அந்த வீட்டை விட்டு வந்து விட்டதாகவும், அதன் பிறகு இசைவாணி மற்றும் சதீஷ் இருவருக்கும் விவாகரத்து நடந்திருக்கிறது.

பிறகு சதீஷ் வேறு திருமணம் செய்து கொண்டதால் தற்போது அவருக்கும் இசைவாணிக்கும் எந்த தொடர்பும் இல்லாத நிலை உள்ளது. இருப்பினும் இசைவாணி சமீபத்தில் சதீஷின் மீது புகார் அளித்திருந்தார். ஏனென்றால் சதீஷ் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்ட பிறகு, தன்னை மனைவி என்று குறிப்பிட்டு இசை நிகழ்ச்சியில் பாட வைப்பதற்காக முன் பணம் வாங்கியிருக்கிறார்.

இதனால் படத்தை கொடுத்தவர்கள் தன்னிடம் வந்து கேட்டதால் புகார் அளித்ததாக தெரிவித்துள்ளார். இப்படி பிக்பாஸ் நிகழ்ச்சியில் எதுவும் சொல்லாமல் அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு தன்னுடைய கடந்து வந்த பாதையில் தெரிவித்திருப்பதை வைத்து நெட்டிசன்கள் வெளுத்து வாங்குகின்றனர். இசைவாணியின் வாழ்க்கையில் நடந்த விஷயம் எல்லாம் சாதாரணம் தான்.

இதை மறைக்க வேண்டிய அவசியம் இல்லை. இதை பிக்பாஸில் தெரிவித்திருந்தால் அவருக்கு இன்னும் ரசிகர்கள் உருவாக்கியிருப்பார்கள். தன்னுடைய திருமணத்தை பற்றி எதுவும் பிக்பாஸில் தெரிவிக்க கூடாது என அழுத்தமாக இருந்த இசைவாணியை விட பவானி ரெட்டி எவ்வளவோ பரவாயில்லை.

பவானி ரெட்டி காதலித்து திருமணம் செய்து கொண்டவர் தற்கொலை செய்து கொண்டதும், அதன் பிறகு அவருக்கு இன்னொரு காதல் வந்தது. அதுவும் தோல்வியில் முடிந்தது என உண்மைகளை எல்லாம் பிக்பாஸ் ரசிகர்களிடம் வெளிப்படையாக தெரிவித்தார். இதனால் ரசிகர்களும் அவரை டாப் 5 போட்டியாளராக மாற்றினர். ஆனால் இசைவாணி தன்னுடைய இமேஜை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக திருமணத்தைப் பற்றி மறைத்ததால் நெட்டிசன்கள் அதை வைத்தே இசைவாணியை திட்டி தீர்க்கின்றனர். தற்போது பவானி  அமீருடன் கிசுகிசுக்கப்படுகிறது.

 

Trending News