சனிக்கிழமை, டிசம்பர் 28, 2024

4 போட்டியாளர்களின் சம்பளத்தை மட்டுமே உயர்த்திய பிக் பாஸ்.. இவங்கதான் அல்டிமேட்டின் அஸ்திரம் போல

டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி 14 போட்டியாளர்களுடன் துவங்கப்பட்டு, 48 நாட்கள் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சி துவங்கிய இரண்டாவது நாளிலேயே போட்டியாளர்கள் காரசாரமான விவாதத்திலும், சண்டை சச்சரவிலும் இறங்கி நிகழ்ச்சியை சூடுபிடிக்க செய்துள்ளனர்.

இதில் ஓவியா வைல்டு கார்ட் என்ட்ரி ஆகக் கூடிய விரைவில் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளார். இவருடன் இன்னும் ஒரு சிலரும் பிக்பாஸ் அல்டிமேடில் வைல்ட் கார்ட் என்ட்ரி கொடுக்க உள்ளனர். எனவே பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் தற்போது கலந்து கொண்டுள்ள போட்டியாளர்களின் சம்பள விபரம் சோஷியல் மீடியாவில் வைரலாக பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது.

பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் வம்பை வழியில் இழுத்துப் போடும் வனிதாவிற்கு ஒரு நாளைக்கு மட்டும் ரூபாய் 50,000 சம்பளம் வழங்கப்படுகிறதாம். அதேபோன்று சினேகனுக்கும் ஒரு நாளைக்கு ரூபாய் 50,000 சம்பளம் வழங்கப்படுகிறதாம்.

இவர்களைத் தொடர்ந்து தாடி பாலாஜிக்கு ஒரு நாள் மட்டும் ரூபாய் 40, 000 சம்பளமாகவும், ஜூலிக்கு ஒரு நாளைக்கு ரூபாய் 30,0000 சம்பளம் வழங்கப்படுகிறதாம். இவர்கள் நான்கு பேருக்கு மட்டுமே ஏற்கனவே நடந்து முடிந்த சீசனில் வழங்கப்பட்ட சம்பளத்தை விட அதிகமாக கொடுக்கப்படுகிறதாம்.

மற்ற 10 போட்டியாளர்களுக்கு அவரவர்கள் பங்கேற்ற பிக் பாஸ் சீசனில் எவ்வளவு சம்பளம் வாங்கினார்களோ, அதே சம்பளம் தான் பிக்பாஸ் அல்டிமேட்டிலும் கொடுப்பதாக பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார்களாம்.

எனவே வனிதா, தாடி பாலாஜி, சினேகன், ஜூலி இவர்கள் நான்கு பேருக்கு மட்டும் சம்பளத்தை உயர்த்திய பிக் பாஸ் ஏன் மற்ற போட்டியாளர்களுக்கு ஓர வஞ்சகம் காட்டியுள்ளார் என்று சோசியல் மீடியாவில் பிக்பாஸ் ரசிகர்கள் கழுவிக் கழுவி ஊற்றியுள்ளனர்.

Trending News