வியாழக்கிழமை, ஜனவரி 2, 2025

பிக்பாஸில் அதிக கெட்ட வார்த்தை பேசிய நபர்.. இந்த வாரம் உறுதிய இவங்க காலி

டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வார ஞாயிற்றுக் கிழமை அன்று சிம்பு தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியில் பிக்பாஸ் வீட்டில் இருந்து நாமினேஷன் லிஸ்டில் இருக்கும் ஒரு நபர் மக்கள் அளித்த ஓட்டின் அடிப்படையில் குறைந்த வாக்குகளை பெறுபவர்கள் வெளியேற்றப்படுவார்கள்.

அந்த வகையில் கடந்த வார நாமினேஷன் லிஸ்டில் இருந்த நிரூப், அனிதா சம்பத், தாமரைச்செல்வி, சுருதி, சதீஸ், ஜூலி உள்ளிட்ட ஆறு பேரில் அனிதா சம்பத் குறைந்த வாக்குகளை பெற்ற இந்த வாரம் எலிமினேட் ஆகப் போகிறார்.

ஏற்கனவே அனிதா சம்பத் பிக் பாஸ் சீசன்4 நிகழ்ச்சியில் செய்தி வாசிப்பாளராக அறிமுகமாகி, பின்பு நிகழ்ச்சிக்குப் பிறகு ஒரு சில படங்களில் கமிட்டாகி நடித்துக்கொண்டிருந்தார். எனவே மீண்டும் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் ரீ என்ட்ரி கொடுத்த அனிதா சம்பத், பிக் பாஸ் சீசன்3 நிகழ்ச்சியில் இருந்ததைவிட முற்றிலும் மாறுபட்டு காணப்பட்டார்.

ஏனென்றால் வீட்டிலிருக்கும் மற்ற பெண் போட்டியாளர்களை விட இவர் அடிக்கடி நிகழ்ச்சிகள் கெட்ட வார்த்தை பேசியது பிக்பாஸ் ரசிகர்களிடையே சர்ச்சைக்குளாக்கப்பட்டது. அத்துடன் இவர் சக போட்டியாளர்களிடம் திருமணமான பெண் போல் நடந்து கொள்ளாமல், எல்லை மீறி பேசுவது பெரிதும் விமர்சிக்கப்பட்டது.

அத்துடன் குட்டி பிக்பாஸ் என்னுடைய வயிற்றில் வளர்கிறது என்பது போன்ற உரையாடல்களில் அனிதா சம்பத் ஈடுபட்டு, அவர் பேசிய அனைத்து வீடியோவும் சோசியல் மீடியாவில் வைரலானது. இவ்வாறு நாளுக்கு நாள் அனிதா சம்பத் பிக்பாஸ் ரசிகர்களிடையே வெறுப்பை சம்பாதித்த போட்டியாளராக மாறிக்கொண்டிருந்தார்.

bigboss-Ultimate
bigboss-Ultimate

கடைசியில் நாமினேஷன் லிஸ்டில் இருந்த அனிதா சம்பத்தை ஆதரிக்காத ரசிகர்கள் தற்போது குறைந்த ஓட்டுக்களை அளித்தால் அனிதா சம்பத்திற்கு வழங்கி இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றுகின்றனர்.

Trending News