வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

அஜித் கவனத்திற்கு வராத பெரிய மோதல்.. ஹெச் வினோத் போடும் மோசமான சண்டை

சமீபகாலமாக அஜித் நடிக்கும் திரைப்படங்களில் சண்டை காட்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேர் கொண்ட பார்வை, வலிமை போன்ற திரைப்படங்களில் இடம் பெற்றிருந்த சண்டைக் காட்சிகள் அனைவரையும் மிரள விட்டது.

இதற்கு முக்கிய காரணம் ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன் தான். ஆனால் அதற்கு இப்போது ஆபத்து வந்திருக்கிறது. ஏனென்றால் எச் வினோத் படப்பிடிப்பு தளத்தில் ஒவ்வொருவரிடமும் ஏதாவது ஒரு பிரச்சனை செய்து கொண்டிருக்கிறாராம். ஏற்கனவே அவர் திலீப் சுப்பராயனுடன் கருத்து வேறுபாட்டில் இருந்தார்.

Also read:அஜித்திற்கு கிடைத்த தரமான வில்லன்.. AK62 செதுக்கி வைத்திருக்கும் விக்னேஷ் சிவன்

அந்தப் பிரச்சனை கொஞ்சம் கொஞ்சமாக பெரிதாகி இருவரும் வாய் சண்டை போடும் அளவுக்கு வந்து விட்டதாம். ஒருவரை ஒருவர் பார்த்தாலே கண்டபடி திட்டிக் கொள்ளும் அளவிற்கு சென்றதால் துணிவு திரைப்படத்தில் திலீப் சுப்பராயன் பணிபுரிய மாட்டேன் என்று விலகினார்.

அதைத்தொடர்ந்து தற்போது சுப்ரீம் சுந்தர் இந்த படத்திற்கு சண்டைக் காட்சிகளை அமைத்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் வினோத் மற்றொரு நபருடனும் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறாராம். தனக்கு ஏற்ற ஒரு குழுவை அமைத்துக் கொண்டு பணிபுரியும் வினோத் இப்போது ஆர்ட் டைரக்டர் உடன் கருத்து வேறுபாட்டில் இருக்கிறார்.

Also read:எம்ஜிஆர், சிவாஜியை ஃபாலோ செய்த விஜய், அஜித்.. இரு தலைமுறைக்கும் இருக்கும் ஒற்றுமை

இந்தப் பிரச்சனையும் வளர்ந்து கொண்டே போன நிலையில் அவரும் தற்போது படத்தில் இருந்து விலகி உள்ளதாக கூறப்படுகிறது. இப்படி இயக்குனரால் ஒவ்வொருவராக படத்தில் இருந்து விலகுவது சில விமர்சனங்களையும் ஏற்படுத்தி உள்ளது.

இது அஜித் கவனத்திற்கு சென்றதா என்ற ஒரு கேள்வியும் எழுந்துள்ளது. அப்படி சென்றிருந்தால் அவர் நிச்சயம் இதில் ஏதேனும் நடவடிக்கை எடுத்திருப்பார். ஆனாலும் வினோத் இப்படி எதற்கெடுத்தாலும் சண்டையிட்டு வருவது பட குழுவினரை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.

Also read: ‘V ‘ செண்டிமெண்ட்டில் அஜித்தின் சக்ஸஸ்.. தலையில் துண்டைப் போட்ட 4 படங்கள்

Trending News