வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

நின்னு விளையாடும் தளபதியின் கோட் படம்.. கெத்தாய் லப்பர் பந்து வெறியாட்டம் ஆடியும் விஜய் காட்டும் மாஸ்

செப்டம்பர் ஐந்தாம் தேதி விநாயகர் சதுர்த்தியை குறி வைத்து ரிலீஸ் ஆன கோட் பாடம் இன்றுவரை ஹவுஸ்புல் காட்சிகள் ஓடிக்கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் மட்டும் இதுவரை இந்த படம் 200 கோடிகளுக்கு மேல் வசூல் சாதனை செய்துள்ளது. மொத்தமாய் 400 கோடிகள் வரை வசூலித்துள்ளது

கோட் படத்துக்கு பின் ஒரே ஒரு படத்தில் மட்டுமே விஜய் நடிக்க உள்ளார். தளபதி 69 என அறிவிக்கப்பட்ட இந்த படத்தை எச் வினோத் இயக்க உள்ளார். இந்த படத்தின் சூட்டிங் விரைவில் ஆரம்பிக்க உள்ளது. இந்த படத்தோடு சினிமாவிற்கு முழுக்கு போட்டுவிட்டு விஜய் முழு நேர அரசியலில் களம் காண உள்ளார்.

கெத்தாய் லப்பர் பந்து வெறியாட்டம் ஆடியும் விஜய் காட்டும் மாஸ்

23 நாட்களாக இன்னும் கோட் படம் மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் ஹவுஸ்புல் காட்சிகள் ஓடிக்கொண்டிருக்கிறது. அதற்கு பிறகு 10 முதல் 15 படங்கள் வந்தாலும் கோட் படத்தின் பக்கத்தில் கூட நிற்க முடியவில்லை. இன்னமும் கோட் படம் நல்ல வசூல் வேட்டை ஆடி வருகிறது.

தற்சமயம் அட்டகத்தி தினேஷ் நடிப்பில் வெளிவந்த லப்பர் பந்து படம் நன்றாக ஓடி வந்த நிலையிலும், கோட் படத்திற்கு உண்டான ஸ்கீரின்களில் எந்த ஒரு மாற்றமும் இல்லை. கோட் படத்தை தவிர மற்ற படங்களை தூக்கி விட்டு லப்பர் பந்துக்கு அதிக காட்சிகளை ஒதுக்கி வருகின்றனர்.

கோட் படத்தின் ஓ டி டி உரிமையை நெட்ஃப்ளிக்ஸ் வாங்கியுள்ளது. இந்த படத்தின் சாட்டிலைட் உரிமைகளை ஜீ தொலைக்காட்சி வாங்கியுள்ளது. வரும் அக்டோபர் மாதம் முதல் வாரத்திற்குள் கோட் படம் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Trending News