புதன்கிழமை, ஜனவரி 22, 2025

வேர்ல்டு கப்போடு அமெரிக்காவை காலி பண்ணிய ஆர் ஜே பாலாஜன்.. திரிஷாவும் இல்ல நயன்தாராவும் இல்ல சாமியோவ்

Balaji in problem: ஆர்ஜே பாலாஜி அமெரிக்காவிற்கு குடும்பத்தோடு சென்றுவிட்டார். ஸ்டார் ஸ்போர்ட்ஸ் t20 உலக கோப்பை வர்ணனையாளராக செயல்பட்டுக் கொண்டிருந்தவர், இந்தியா உலகக் கோப்பை வாங்கியவுடன் மிக சந்தோஷத்தோடு அமெரிக்காவிலிருந்து சென்னை வந்துவிட்டார்.

வந்தவர் பழைய குருடி கதவ தொறடி என பழைய படத்தை தூசி தட்ட ஆரம்பித்து விட்டார். கடந்த ஆறு மாதங்களாக எந்த ஒரு படத்திலும் கமிட்டாகாமல் இருந்து வந்தார். இப்பொழுது மீண்டும் படம் இயக்குவதற்கு ஆயத்தம் ஆகிவிட்டார்.

ஐபிஎல் கமெண்டரி, டி20 உலக கோப்பை கமெண்டரி என 5 மாதங்களாக பிசியாக இருந்தவர் இப்பொழுது சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கப் போகிறார். பாலாஜி நடித்து இயக்கி சூப்பர் ஹிட் ஆன படம் மூக்குத்தி அம்மன் இதற்கு ஆர்டிஸ்ட் தேடும் வேலையில் இறங்கிவிட்டார்.

மூக்குத்தி அம்மன் படத்தின் முதல் பாகத்தில் நடித்தவர் நயன்தாரா. 2020ஆம் ஆண்டு வெளிவந்த இந்த படம் சூப்பர் ஹிட் ஆனது. 7 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம் கிட்டத்தட்ட 25 கோடிகள் வசூலித்து பாலாஜிக்கு பெத்த லாபத்தை கொடுத்தது.

திரிஷாவும் இல்ல நயன்தாராவும் இல்லை சாமியோவ்

இப்பொழுது இந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க நயன்தாராவை அணுகியிருக்கிறார் ஆர் ஜே. ஆனால் நயன்தாரா 10 கோடிகள் சம்பளம் கேட்டதால் தலை தெரிக்க ஓடிவிட்டார் பாலாஜன். அதன் பிறகு திரிஷாவை கமிட் செய்துள்ளார். அவரும் நயன்தாரா போல் சம்பளம் அதிகமாக கேட்டிருக்கிறார்.

திரிஷா இல்லனா நயன்தாரா என்று மனக்கோட்டை கட்டியிருந்தவருக்கு, அவர்கள் கேட்கும் சம்பளம் பெரும் தலைவலியை கொடுத்துள்ளது. இப்பொழுது இவர்கள் இருவரையும் ஒதுக்கி விட்டு சமந்தா விடம் பேசி உள்ளார் பாலாஜி. அவரும் பெரும் தொகையை கேட்கவே மீண்டும் திரிஷாவே ஓகே என்ற முடிவில் இருக்கிறார். இப்பொழுது மூக்குத்தி அம்மன், மாசாணி அம்மனாக உருவாக தயாராகிக் கொண்டிருக்கிறது.

Trending News