வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

பிரேம்ஜி கல்யாண பத்திரிகையில் விட்டுப்போன முக்கியமான பெயர்.. எவ்வளவோ பண்ணியும் இத மறந்த முத்தின கட்டை

Premji Marrige: 45 வயதில் இப்பொழுது தான் பிரேம்ஜிக்கு நேரம் கூடி வந்திருக்கிறது. சேலத்தை சேர்ந்த தூரத்து உறவினர் பெண்ணை மணக்கிறார். இந்த மாதம் ஒன்பதாம் தேதி திருத்தணியில் நடக்கிறதுபிரேம்ஜி அமரனின் கல்யாணம். சொந்த பந்தங்கள் மட்டும் தான் இந்த கல்யாணத்தில் கலந்து கொள்கிறார்கள்.

கல்யாணம் முடிந்த ஒரு மாதத்திற்கு பின் தான் சென்னையில் ரிசப்ஷன் வைக்கிறார்கள். “எவ்வளவோ பண்ணிட்டோம் இத பண்ண மாட்டோமா” என பிரேம்ஜியின் வசனத்தை பேசுபவர்கள். ரொம்பவே லேட்டாக பண்ணுகிறீர்கள் என்று கிண்டல் செய்து வருகிறார்கள்.

பிரேம்ஜி கல்யாணம் செய்து கொள்ளும் பெண் ஒரு பாடகியாம். இந்த கல்யாண பத்திரிக்கை ரொம்பவே பாரம்பரியமாக அடித்து இருந்தார்கள். சாதாரண மஞ்ச பத்திரிகைகள் தான் பிரிண்ட் செய்து இருந்தனர். பத்திரிக்கையில் வெங்கட் பிரபு, கங்கை அமரன் என எல்லாருடைய பெயரும் இடம் பெற்றிருந்தது. இதுவரை பிரேம்ஜி வெங்கட் பிரபு காம்போவில் வெளிவந்த படங்கள்,

Chennai 600028 (2007)
Saroja (2008)
Goa (2010)
Mankatha (2011)
Biriyani (2013)
Massu Engira Masilamani (2015)
Chennai 600028 II:(2016)
Party (Unreleased)

முக்கியமான பெயர் விட்டதால் சிக்கலில் மாட்டிய முத்தின மூஞ்சி

கங்கை அமரனின் அண்ணன் மற்றும் பிரேம்ஜியின் பெரியப்பா இளையராஜா பெயர் மற்றும் அதில் இடம்பெறவில்லை. கங்கை அமரன், இளையராஜா இருவருக்கும் மனக்கசப்பு ரொம்ப வருடங்களாகவே இருந்து வருகிறது என்று ஏற்கனவே சொல்லி வந்த நிலையில் அவர் பெயர் இடம்பெறாதது அதை உறுதிப்படுத்தியுள்ளது.

ஆனால் சமீபத்தில் கங்கை அமரன் கொடுத்த பேட்டிகளில் எல்லாம் எனக்கு ஒரே அண்ணன் அது இளையராஜா மட்டும்தான் என கம்பீரக் குரலில் பேசினார். ஆனால் அவர் பெயரை பத்திரிக்கையில் போடாததற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. குடும்பத்தில் பெரியவர் இளையராஜா தான். அவர்தான் முன்னின்று இந்த கல்யாணத்தை நடத்த வேண்டும்.

இயக்குனர், இசையமைப்பாளர் என பல ரூபத்தில் சுற்றி வரும் பிரேம்ஜி

Trending News